ஹோலி கொண்டாடப் போவதில்லை: ஜனாதிபதி
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
இந்த ஆண்டு ஹோலிப் பண்டிகையைக் கொண்டாடப் போவதில்லை என்று ஜனாதிபதி கே.ஆர். நாராயணன்இன்று (வியாழக்கிழமை) அறிவித்துள்ளார்.
இதுகுறித்து ஜனாதிபதி மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
நாட்டின் பல இடங்களிலும், முக்கியமாகக் குஜராத்தில் மதக் கலவரங்கள் ஏற்பட்டு நூற்றுக்கணக்கான பேர்பலியாகியுள்ளனர்.
இந்நிலையில் ஹோலிப் பண்டியைக் கொண்டாடுவது நன்றாக இருக்காது.
எனவே இந்த ஆண்டு ஹோலிப் பண்டிகையை ஜனாதிபதி கொண்டாட மாட்டார் என்று அந்தச் செய்திக் குறிப்பில்கூறப்பட்டுள்ளது.
ஹோலிப் பண்டிகையைக் கொண்டாடப் போவதில்லை என்று உள்துறை அமைச்சர் எல்.கே. அத்வானி ஏற்கனவேகூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications