"உறவானாலும் நட்பானாலும் கூட்டணி கூட்டணிதான்": இல. கணேசன்
திருவண்ணாமலை:
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கொள்கையை ஏற்றுக் கொள்ளும் வரை நட்பு, உறவு என்று எந்தப் பெயரிட்டுஅழைத்தாலும் சரி, திமுகவுடனான கூட்டணியில் எந்த மாற்றமும் இல்லை என்று தமிழக பாஜக பொதுச் செயலாளர்இல. கணேசன் கூறினார்.
திருவண்ணாமலையை அடுத்த மங்கலத்தில் ஒருபொதுக் கூட்டத்தில் இல. கணேசன் பேசியதாவது:
வேண்டப்பட்ட மாற்றுக் கட்சியினரின் சாவுக்கு செல்வதற்குக் கூட தலைமையிடமிருந்து அனுமதியை எதிர்பார்க்கும்அநாகரிக அரசியல்தான் தற்போது தமிழகத்தில் உள்ளது.
எங்களுக்கு எதிரிக் கட்சி என்று யாருமே இல்லை. அந்த அடிப்படையிலேயே அதிமுகவுடன் நட்பு என்றேன்.
ஆனால் வாஜ்பாய் அரசை ஆதரிப்பதோடு நில்லாமல், மத்தியில் தம்முடைய அமைச்சர்களை இடம்பெறச்செய்துள்ள திமுகவுடன் உள்ள பிணைப்பை சாதாரணமாக நட்பு என்று சொல்ல முடியாது. உறவு என்றுதான் சொல்லமுடியும். இப்படித்தான் நான் பேசினேன்.
விபூதி விவகாரத்தை வைத்தோ அல்லது ஆர்.எஸ்.எஸ்சின் நிலையை வைத்தோ திமுக-பாஜக உறவுஏற்படவில்லை.
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் செயல் திட்டத்தையும் வாஜ்பாயின் தலைமையையும் ஏற்றுக் கொள்ளும் வரைநட்பு என்றோ, உறவு என்றோ, தோழமை என்றோ அல்லது எந்தப் பெயரிட்டு அழைத்தாலும் சரி, திமுகவுடனானகூட்டணியில் மாற்றம் எதுவும் இல்லை.
எங்களுடைய மரியாதைக்குரிய தலைவராகவே நாங்கள் கருணாநிதியை மதிக்கிறோம் என்றார் இல. கணேசன்.












Click it and Unblock the Notifications