கூடங்குளம் அணு உலை கட்டுமானப் பணி இன்று தொடக்கம்
Subscribe to Oneindia Tamil
திருநெல்வேலி:
கூடங்குளம் அணுமின் நிலைய வளாகத்தில் அணு உலைக் கட்டுமானப் பணி இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலைதொடங்கியது.
திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் ரஷ்யா உதவியுடன் அணு மின் நிலையம் அமைய உள்ளது. ரூ.14,000கோடி மதிப்பீட்டில் தலா 1,000 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட இரு அணு மின் உலைகள்அமைக்கப்பட உள்ளன.
இதற்கான அடிப்படைக் கட்டமைப்புப் பணிகள் ஏற்கனவே முடிந்து விட்டன. ரஷ்ய விஞ்ஞானிகள் இந்தஅடிப்படை அகழ்வாய்வுப்பணிகளை ஏற்கனவே மேற்பார்வையிட்டு திருப்தியடைந்துள்ளனர்.
இந்நிலையில் இன்று ரஷிய அணு சக்தித்துறை துணை அமைச்சர் ரெஷெட் நிகோவ் கட்டுமானப் பணிகளைதொடங்கி வைத்தார்.












Click it and Unblock the Notifications