எதிர்க் கட்சிகள் ஒட்டுமொத்தமாக வெளிநடப்பு
சென்னை:
சென்னை மாநகராட்சி இடைத் தேர்தலில் அதிமுகவினரின் முறைகேடுகள் தொடர்பாக தமிழக சட்சபையில் பெரும்அமளி ஏற்பட்டது.
திமுக எம்.எல்.ஏக்களுக்கும் அதிமுக எம்.எல்.ஏக்களுக்கும் இடையே அடிதடி ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது.
இதையடுத்து பா.ஜ.க. உள்பட அனைத்து எதிர்க் கட்சி எம்.எல்.ஏக்களும் ஒட்டு மொத்தமாக வெளிநடப்புசெய்தனர்.
சென்னை மாநகராட்சியில் உள்ள 16 மற்றும் 99வது வார்டுகளில் நேற்று நடந்த இடைத் தேர்தலின்போது,அதிமுகவினர் பல வாக்குச் சாவடிகளைக் கைப்பற்றி கள்ள ஓட்டுப் போட்டனர்.
இதை திமுக உள்ளிட்ட அனைத்து எதிர்க் கட்சிகளும் கண்டித்தன. அதிமுகவினரின் அராஜகத்தைக் கண்டித்துசாலை மறியல் செய்த திமுக எம்எல்.ஏவான பரிதி இளம்வழுதி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட திமுகவினர் கைதுசெய்யப்பட்டனர்.
இந்த இரு வார்டுகளிலும் இன்று நடக்கும் வாக்கு எண்ணிக்கையைப் புறக்கணிக்கப் போவதாகவும் திமுககூறியுள்ளது.
இந்நிலையில் இன்று சட்டசபை கூடியவுடனேயே எதிர்க் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்துகொண்டு இந்தப் பிரச்சனையை எழுப்பினர்.
வாக்குச் சாவடிகளைக் கைப்பற்றி அதிமுகவினர் கள்ள ஓட்டுப் போட்டதைக் கண்டித்து எதிர்க் கட்சி உறுப்பினர்கள்கோஷங்களை எழுப்பினார்கள். இதை எதிர்த்து ஆளுங்கட்சி உறுப்பினர்கள் கோஷமிட்டனர்.
இரு தரப்பினருக்கும் இடையே வாய்ச் சண்டை சிறிது சிறிதாக வலுத்தது. இரு தரப்பினரும் கடுமையானவார்த்தைகளால் திட்டிக் கொண்டனர். இரு தரப்பிலும் உள்ள சில மூத்த தலைவர்கள் எவ்வளவோ தடுத்துப்பார்த்தும் இரு தரப்பினரும் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து திமுக உறுப்பினர்கள் அவையின் மையப் பகுதிக்குச் சென்று கூட்டத்தை நடத்த விடாமல் தடுத்தனர்.இதையடுத்து அதிமுக உறுப்பினர்கள் அப்பகுதிக்கு விரைந்து வந்தனர்.
இதையடுத்து அங்கு திமுக-அதிமுக எம்.எல்.ஏக்களுக்கிடையே பெரும் கைகலப்பு ஏற்படும் சூழ்நிலை உருவானது.அப்போது பேசிய சபாநாயகர் காளிமுத்து, இந்தப் பிரச்சனையை இப்போது எழுப்ப வேண்டாம். அதற்கு நான்அனுமதி தர மாட்டேன் என்றார்.
இதைக் கண்டித்து தி.மு.க., த.மா.கா., பா.ம.க., காங்கிரஸ், பாஜக மற்றும் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் அனைவரும் சபையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
அதிமுகவை ஆதரிக்க ஆரம்பித்திருக்கும் பா.ஜ.கவும் சேர்ந்து வெளிநடப்பு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications