திமுகவுடன் காங்கிரஸ் கூட்டணியா? - இளங்கோவன் விளக்கம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
திமுகவுடன் தங்கள் கட்சி கூட்டணி அமைக்குமா என்பது குறித்து அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்திதான் முடிவெடுப்பார் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் இன்று (புதன்கிழமை) கூறினார்.
சென்னையில் நிருபர்களிடம் இளங்கோவன் கூறியதாவது:
வரவிருக்கும் சட்டசபைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைப்பது குறித்துஅன்னை சோனியாதான் முடிவெடுப்பார்.
தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. அது அறிவிக்கப்பட்ட பிறகு கட்சித் தலைமையுடன் கலந்துஆலோசித்து கூட்டணி குறித்து நான் தெரிவிப்பேன் என்றார் இளங்கோவன்.
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பற்றி நேற்று சட்டசபையில் தேவையில்லாமல் ஜெயலலிதாவும் பொன்னையனும்பேசியதற்கு இளங்கோவன் கடும் கண்டனம் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications