சட்டசபையில் மயங்கி விழுந்த எம்.எல்.ஏ.
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக சட்டசபையில் திடீரென மயங்கி விழுந்த தமிழ் மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏவான ஹக்கீமுக்கு சபாநாயகர்காளிமுத்து அறையில் வைத்து முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
நேற்று (செவ்வாய்க்கிழமை) சட்டசபையில், விடுதலைப்புலிகளின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரனைஇலங்கையிலிருந்து கைது செய்து கொண்டு வருவது தொடர்பான தீர்மானம் அவையில் கொண்டு வரப்பட்டது.அது தொடர்பாக விவாதமும் நடந்தது.
அப்போது அவையில் அமர்ந்திருந்த மதுரை கிழக்குத் தொகுதி எம்.எல்.ஏ. ஹக்கீம் திடீரென மயங்கி விழுந்தார்.
உடனடியாக அவரை காளிமுத்துவின் அறைக்குக் கொண்டு சென்று முதலுதவி அளித்தனர். அங்கு அவர் சிறிதுநேரம் ஓய்வு எடுத்த பிறகே சரியானார்.












Click it and Unblock the Notifications