For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சொந்த வீட்டிலேயே திருடிய பெண்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னையில் நடந்த ஒரு திருட்டுச் சம்பவத்தில் குற்றவாளி பிடிபட்டார். ஆனால் அக்குற்றவாளி அதே வீட்டைச்சேர்ந்தவர் என்பதுதான் வேடிக்கை.

எழும்பூர் பகுதியில் உள்ள அபார்ட்மென்ட்டில் வசித்து வருபவர் பிலிப் அருணாச்சலம். இவர் தென்னாப்பிரிக்கபிரஜையாவார். சமீபத்தில் குடும்பத்துடன் ஊருக்குச் சென்று விட்டு சென்னை திரும்பினார் பிலிப்.

வீட்டுக்கு வந்தபோது, வீட்டிலிருந்த நகை, பணம் ஆகியவை திருடப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்துபோலீஸில் புகார் கொடுத்தார்.

போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். கடந்த வாரம் நடந்த அந்தத் திருட்டு குறித்து துப்பு துலங்கியது. அதில்கிடைத்த தகவல்கள் போலீசாரைப் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கின.

காரணம், நகை மற்றும் பணத்தைத் திருடியது பிலிப்பின் இரண்டாவது மனைவி, அவரது அக்கா, அக்கா மகள்மற்றும் தம்பி ஆகியோர் என்பதுதான்.

பிலிப்புக்கு இரண்டு மனைவிகள். இரண்டாவது மனைவி நித்யா எழும்பூர் வீட்டில் வசித்து வருகிறார். முதல்மனைவி மீது அதிகம் பாசம் கொண்ட பிலிப், நித்யா மீதும் பாசத்துடன்தான் இருந்தார்.

இருப்பினும் முதல் மனைவிக்கே தனது சொத்துக்கள், நகை, பணத்தை பிலிப் கொடுத்து விடுவாரோ என்ற பயம்நித்யாவுக்கு எப்போதும் இருந்து வந்தது.

இந்நிலையில், தனது வீட்டில் இருந்த நகைகள், பணம் ஆகியவற்றை திருடிச் செல்லுமாறு பெங்களூரில் வசித்துவரும் தனது அக்கா கஸ்தூரியிடம் ஆலோசனை கூறியுள்ளார்.

இதை ஏற்றுக்கொண்ட கஸ்தூரி, தனது மகள் கல்பனா, தம்பி ராஜேஷ் ஆகியோருடன் சேர்ந்து, பிலிப்குடும்பத்துடன் ஊருக்குச் சென்றிருந்தபோது, வீட்டுக்குள் வந்து திருடிச்சென்றுள்ளார். இந்தத் திருட்டை நித்யாபோலீசாரிடம் ஒப்புக் கொண்டுள்ளார்.

தனது வீட்டில் கொள்ளையடித்துச் சென்றவர்கள் தனது மனைவியின் உறவினர்கள் என்பதும், இத்திட்டத்தைமனைவியே போட்டுக் கொடுத்துள்ளார் என்பதையும் அறிந்த அருணாச்சலம் அதிர்ச்சியில் உறைந்து போனார்.

மனதைத் தேற்றிக் கொண்ட அவர் சென்னை மாநகரப் போலீஸ் கமிஷனர் விஜயகுமாரைச் சந்தித்து குற்றத்தைத்துப்பு துலக்கிய விதத்திற்காகப் பாராட்டு தெரிவித்தார்.

தென்னாப்பிக்காவில் இதுபோன்ற குற்றம் நடந்திருந்தால் கண்டிப்பாக இவ்வளவு விரைவாக குற்றவாளிகளைகண்டுபிடித்திருக்க மாட்டார்கள். சென்னை போலீஸ் இஸ் ரியலி கிரேட் என்று கூறினார் பிலிப். திருட்டு நடந்தஅன்றும் உடனடியாக வந்து விசாரித்ததற்காகப் போலீசாரை இவர் பாராட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மனைவியே தவறு செய்திருப்பதால் அவரை எப்படித் தண்டிப்பது என்று கூறிய அருணாச்சலம், தான் கொடுத்தபுகாரை வாபஸ் பெறவிருப்பதாகவும் தெரிவித்தார். அருணாச்சலத்தின் மனைவி நித்யா, ஒரு கபடி வீராங்கனைஎன்பது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X