For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாகிஸ்தான் மீது உடனே போர் தொடுக்க வேண்டும்: ஜெயலலிதா

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

பாகிஸ்தான் மீது முழு அளவில் போர் தொடுக்க வேண்டும் என மத்திய அரசை முதல்வர் ஜெயலலிதா கேட்டுக்கொண்டுள்ளார்.

ஜம்மூவில் சமீபத்தில் நடந்த தாக்குதலில் ராணுவ வீரர்களின் 10 குழந்தைகளும் மனைவி, தாய், சகோதரிகளும்கொல்லப்பட்டுள்ளனர். இதையடுத்து பாகிஸ்தானுக்கு பதிலடி தருவது குறித்து நாடாளுமன்றத்தில் இன்று தீவிரவிவாதம் நடந்து வருகிறது.

இந்த விவாதத்தில் பேசிய எதிர்க் கட்சித் தலைவர்கள் அனைவருமே பாகிஸ்தானையும் தீவிரவாதிகளையும் ஒடுக்கமத்திய அரசு போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளனர்.

இந் நிலையில் சென்னையில் நிருபர்களிடம் ஜெயலலிதா கூறியதாவது:

பாகிஸ்தானுடன் நமக்கிருக்கும் கொஞ்ச நஞ்ச உறவையும் அறுத்துக் கொள்ள வேண்டும். இந்த தைரியமானநடவடிக்கையை மத்திய அரசு எடுத்தால் முழு தேசமும் நிச்சயம் அதற்கு ஆதரவாக ஒன்று திரண்டு நிற்கும்.

நமது நாடாளுமன்றத்தையும் ஜம்மூ -காஷ்மீர் சட்டசபையையும் தீவிரவாதிகள் தாக்கியபோது அதைஅமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தோம். சரியான பதிலடி தரவில்லை. ஆனால் இனியும் பொறுமை உதவாது.இப்போது சரியான அடி கொடுப்பது தான் சரி.

பாகிஸ்தானால் மறக்கவே முடியாத அளவுக்கு கடும் பாடம் புகட்ட வேண்டும். காலதாமதம் ஆகிவிடாமல் மத்தியஅரசு நிச்சயம் நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறேன்.

வரைமுறையைத் தாண்டி நடந்து கொள்கிறது பாகிஸ்தான். இனியும் அவர்களுடன் பெயருக்கு தூதரக உறவைவைத்துக் கொள்வது வேஸ்ட். தூதரக உறவு என்பதையே கேலிக் குறியாக்கிவிட்ட பாகிஸ்தானை மதிக்க வேண்டியஅவசியம் இல்லை.

நம் தேசத்தின் எண்ணற்ற உயிர்களை அந் நாடு கொன்று குவித்துவிட்டது. சாவுகள் நடக்கும்போதெல்லாம்பாகிஸ்தானை இந்தியா குறை கூறுகிறது. உடனே பதிலுக்கு இந்தியாவை குற்றம் சொல்லி பாகிஸ்தான் அறிக்கைவிடுகிறது. ஒவ்வொரு முறையும் இதை சுதந்திரப் போராட்டம் என்று சொல்லி தப்பி வருகிறது பாகிஸ்தான்.

மேற்கத்திய நாடுகள் சம்பவத்தைக் கண்டித்துவிட்டு அமைதியாகிவிடுகின்றன. ஆனால், பாகிஸ்தானைக் கண்டித்துஅவர்கள் ஏதும் செய்வதில்லை.

அதைப் போல நாமும் அமைதியாகவே இருந்து வருகிறோம். சம்பவம் நடந்தவுடன் கோபப்படுவது அப்புறம் சிலநாட்களில் அதை மறந்துவிடுவது நமக்கு வாடிக்கையாகிவிட்டது.

எத்தனை நாளைக்கு பாகிஸ்தானின் இந்தத் தாக்குதல்களை நாம் சும்மா பார்த்துக் கொண்டிருக்கப் போகிறோம்.பெயருக்கு அறிக்கைவிட்டுவிட்டு மத்திய அரசு தீவிரவாதத்தை எதிர்த்துவிட முடியாது. அறிக்கைகளில்சொல்லப்பட்டும் கடும் வார்த்தைகளை செயலிலும் காட்ட வேண்டும்.

காஷ்மீரில் நமது அன்புக்குரிய, தைரியமான வீரர்களை சும்மா உட்கார வைத்துவிட்டு அவர்களை பாகிஸ்தான்கொன்று குவித்து வருவதை பார்த்துக் கொண்டு இருக்கக் கூடாது.

நம் மீது ஒவ்வொரு தாக்குதல் நடந்தபோதும் பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பில் உள்ள அந் நாட்டு ராணுவகண்காணிப்புக் கூடாரங்களை நாம் தகர்த்து எறிந்திருக்க வேண்டும். இந்தக் கண்காணிப்புக் கூடாரங்களில்சுடப்படும் துப்பாக்கிக் குண்டுகள் தான் தீவிரவாதிகள் பாதுகாப்பாக இந்தியாவுக்குள் நுழைய உதவி வருகிறது.

காஷ்மீரில் நடந்து வரும் தாக்குதல்களுக்கு பாகிஸ்தான் தான் பொறுப்பு என்பதை உலகமே உணர்ந்துவிட்டது.பாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட இது தான் சரியான வாய்ப்பு. அதை மத்திய அரசு தவறவிடாமல் முழு அளவில்போர் தொடுக்க வேண்டும்.

இவ்வாறு ஜெயலலிதா கூறினார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X