சென்னை துறைமுகத்தை தகர்க்கப் போவதாக மிரட்டல்
சென்னை:
சென்னை துறைமுகத்தைத் தகர்க்கப் போவதாக மிரட்டல் வந்துள்ளதையடுத்து அங்கு பாதுகாப்புதீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை துறைமுகத்தை மட்டுமல்லாமல் அங்கு வந்து சேரும் கப்பல்களையும் தீவிரவாதிகள் தகர்ப்பதற்குத்திட்டமிட்டிருப்பதாகக் கடந்த சில நாட்களாகவே உளவுத்துறையினர் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதையடுத்து சென்னை துறைமுகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டன.
கடற்படை மற்றும் கடலோரக் காவற்படையைச் சேர்ந்த ரோவர் கிராப்ட் படகுகளும் ஹெலிகாப்டர்களும் சென்னைநோக்கி வந்து கொண்டிருந்த கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க ஆரம்பித்தன.
இந்நிலையில் சென்னை துறைமுகத்தை வெடிகுண்டு வைத்துத் தகர்க்கப் போவதாக இன்று மிரட்டல் வந்துள்ளது.இதையடுத்து அங்கு பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
துறைமுகத்திற்குள் நுழைபவர்கள் அடையாள அட்டை இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். மேலும்அவர்கள் தீவிர சோதனைக்குப் பின்னரே உள்ளே அனுப்பப்படுகிறார்கள்.
இதைத் தவிர கப்பலில் செல்லும் மற்றும் கப்பலிலிருந்து இறங்கி வரும் பயணிகளையும் போலீசார் தீவிரமாகச்சோதனை செய்து வருகின்றனர்.
துறைமுகப் பகுதியில் நாட்டு வெடிகுண்டுகள்
இதற்கிடையே சென்னை துறைமுகப் பகுதியில் சில நாட்டு வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.
இப்பகுதியில் போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒருவர் போலீசாரைக் கண்டதும்திடீரென்று தன் கையிலிருந்த ஒரு பையைக் கீழே போட்டு விட்டு தப்பியோடி விட்டார்.
அந்தப் பையைக் கைப்பற்றிய போலீசார் அதைச் சோதனை செய்தபோது, அதில் 10 நாட்டு வெடிகுண்கள்இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை துறைமுகத்திற்குத் தொடர்ந்து மிரட்டல்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில் இப்பகுதியில் நாட்டுவெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications