சைதை வாக்காளர் பட்டியலில் 5,463 போலி பெயர்கள்: கருணாநிதி புகார்
சென்னை:
சைதாப்பேட்டை தொகுதி வாக்காளர் பட்டியலில் ஏராளமான முறைகேடு நடைபெற்றுள்ளதாக திமுக தலைவர்கருணாநிதி இன்று புகார் கூறினார்.
இது தொடர்பாக சென்னையில் இன்று அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
சைதாப்பேட்டை தொகுதி வாக்காளர் பட்டியலில் ஒருவருடைய பெயரே பல இடங்களில் இடம் பெற்றுள்ளது.பலருடைய பெயர்களும் மாறி மாறி அச்சிடப்பட்டுள்ளன.
இதுபோல் இந்த வாக்காளர் பட்டியலில் 5,463 இடங்களில் பெயர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட முறைஅச்சிடப்பட்டுள்ளன.
எனவே இந்த 5,463 கூடுதல் பெயர்களையும் உடனடியாக வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்க வேண்டும் என்றுதலைமைத் தேர்தல் கமிஷனுக்கும் மாநிலத் தேர்தல் கமிஷனுக்கும் திமுக புகார் கடிதம் அனுப்பியுள்ளது.
வாணியம்பாடி மற்றும் அச்சிறுப்பாக்கம் ஆகிய இடைத் தேர்தல் தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியலில்இதுபோன்ற முறைகேடுகள் நடந்துள்ளன.
எனவே அரசு முத்திரையிடப்பட்ட வாக்காளர் பட்டியலின் பிரதிகளை அந்தந்த தொகுதிகளில் உள்ள அனைத்துஅரசியல் கட்சிகளுக்கும் கொடுக்க வேண்டும் என்றும் தேர்தல் கமிஷனிடம் கோரியுள்ளோம்.
மேலும் கள்ள ஓட்டுப் போடுவதற்காக சைதாப்பேட்டை தொகுதி முழுவதிலும் அதிமுகவினர் ஆட்களைக் குவித்துவருகின்றனர்.
இவர்களுக்கு வசதியாக அத்தொகுதியில் உள்ள போலீஸ் உயரதிகாரிகள் தேர்தல் நடக்கவுள்ள வரும் 31ம்தேதியன்று சைதாப்பேட்டைக்குள்ளாகவே வரக் கூடாது என்று வாய்மொழியாக உத்தரவிடப்பட்டுள்ளனர்.
இவ்வளவு குளறுபடிகளையும் பொறுத்துக் கொண்டு ஒரு அரசியல் கட்சி இங்கு எப்படித் தான் போட்டி போடஇயலும்? ஆனாலும் திமுக இந்த அடக்குமுறைகளை எல்லாம் சமாளித்து நிச்சயம் வெற்றி பெறும்.
வாணியம்பாடி தொகுதியில் உள்ள ஆம்பூரில் நான் இரவு 10 மணிக்கு மேல் பிரச்சாரம் செய்ததாகப் போலீசார் என்மீது வழக்குத் தொடர்ந்துள்ளனர். ஆனால் நான் அப்போது அரசியல் பற்றி எதுவுமே பேசவில்லை. அன்று நான்ஏன் தாமதாக வந்தேன் என்பதைத் தான் மக்களிடம் விளக்கிக் கொண்டிருந்தேன்.
அப்போது அந்த ஓரிரண்டு வாக்கியங்களைக் கூட நான் பேசியிருக்காவிட்டால் தான் கூட்டத்தினர் ஆவேசம்அடைந்து சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் சூழ்நிலை உருவாகியிருக்கும்.
என்னுடைய பலவீனமான உடல் நிலை காரணமாக மேடைக்கு வருவதற்குத் தான் இரவு 10.05 மணி ஆகிவிட்டதேதவிர, அந்தக் குறிப்பிட்ட பிரச்சாரக் கூட்டம் நடந்த இடத்திற்கு 10 மணிக்கு முன்னரே வந்து விட்டேன்.
நான் பேசியதற்கு முந்தைய நாள் தான் தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் இரவு 10.45 மணி வரை பேசிக்கொண்டிருந்தார். அதையெல்லாம் கவனிக்காத போலீசார், என் மீதும் காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் மீதும்மட்டும் வழக்குப் பதிவு செய்துள்ளனர் என்றார் கருணாநிதி.
-
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications