திருட்டு முயற்சி தோல்வி: வீட்டுக்காரரை "லாக்-அப்" செய்த கொள்ளையன்
சென்னை:
சென்னையில் திருட வந்த திருடன் தனது முயற்சி பலிக்காததால், ஆத்திரத்தில் கையோடு கொண்டு வந்திருந்த ஒருபூட்டைக் கொண்டு வீட்டை பூட்டி விட்டு தப்பி விட்டான்.
சென்னை மேற்கு முகப்பேர் பகுதியில் வசித்து வருபவர் கிருஷ்ணன். இவர் தனது குடும்பத்துடன் புதன்கிழமைஇரவு தூங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது வீட்டின் ஜன்னல் பக்கமிருந்து "கர் கர்" என்று சப்தம் கேட்டதும் கிருஷ்ணன் விழித்து எழுந்து வந்துபார்த்தபோது, ஒரு திருடன் கஷ்டப்பட்டு ஜன்னல் கம்பியை ஆக்ஷா பிளேடால் "டர் டர்" என்று அறுத்துக்கொண்டிருந்தான்.
ஜன்னலை அறுத்துக் கொண்டிருந்த திருடன், கிருஷ்ணன் வந்து நிற்பதைப் பார்த்ததும் அதிர்ந்தான். ஆனால்சுதாரித்துக் கொண்டு "டேய் கதவைத் திற" என்று கத்தியுள்ளான்.
ஆனால் பயப்படாத கிருஷ்ணன் திருடனுடைய கண்ணெதிரிலேயே போனை எடுத்து போலீசுக்கு போன் செய்யத்தொடங்கினார். இதைப் பார்த்த திருடன் ஆத்திரமடைந்தான்.
ஜன்னலை அறுக்கும் முயற்சியைக் கைவிட்டு விட்டு தன்னிடமிருந்த ஒரு பூட்டை எடுத்து வீட்டின் வெளிப்புறக்கதவில் பூட்டி விட்டு கடுப்புடன் அங்கிருந்து ஓடி விட்டான்.
இதற்குள் கிருஷ்ணன் போன் செய்ததும் போலீசார் விரைந்து வந்தனர். வெளியே பூட்டப்பட்டிருந்த பூட்டைஉடைத்து கிருஷ்ணனை ரிலீஸ் செய்தனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications