தமிழர்களை உலகறியச் செய்தவர்களே புலிகள் தான்: வைகோ
பாவூர்சத்திரம்:
விடுதலைப்புலிகள் தான் உலகில் தமிழர்களுக்கென புது முகவரி தேடிக் கொடுத்தனர் என்று மதிமுக பொதுச்செயலாளரான வைகோ கூறினார்.
மதிமுகவின் 9வது ஆண்டு தொடக்க விழா பொதுக் கூட்டம் திருநெல்வேலி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் நடந்தது.அக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:
தமிழகத்தில் ஒரு சம்பவம் ஏற்பட்டு விட்டது என்பதற்காக ஒட்டு மொத்த தமிழர்களையும் நாம் கைகழுவி விடமுடியுமா?
கடந்த 50 ஆண்டுகளாக அறவழியில் போராடியும் தீர்வு கிடைக்காததால் தான் புலிகள் ஆயுதங்களைக் கையில்எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
தமிழர்கள் என்றால் யார் என்பது குறித்து உலகத்திற்கு தெரியப்படுத்தியவர்களே புலிகள் தான்.
கடந்த ஓராண்டு கால அதிமுக ஆட்சிக் காலத்தில் கொலை, கொள்ளை, திருட்டு, கற்பப்பு ஆகியவை தான்அதிகரித்துள்ளன. யாருக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை தான் தற்போது நிலவி வருகிறது. அனைத்துக்கட்டணங்களும் உயர்த்தப்பட்டுள்ளன.
ஆட்சியைப் பற்றியும் அதிகாரத்தைப் பற்றியும் மட்டுமே அதிமுகவும் திமுகவும் கவலைப்படுகின்றன. நாட்டைப்பற்றியோ மக்களைப் பற்றியோ சிறிதும் அவர்கள் நினைக்கவில்லை.
இதனால் தான் மக்கள் கவனம் தற்போது மதிமுக மீது திரும்பியுள்ளது. அம்மக்களின் கண்ணீரை நாங்கள் தான்துடைக்கப் போகிறோம் என்றார் வைகோ.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications