பிரபாகரனின் பெற்றோர் இலங்கை சென்றதாகப் புரளி
சென்னை:
சென்னையிலிருந்து இலங்கைக்கு திரும்பிய அகதிகளுடன் விடுதலைப்புலிகளின் தலைவரான பிரபாகரனின்பெற்றோரும் சென்றனர் என்ற புரளி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் போர் துவங்கியதிலிருந்தே அங்கிருந்து பெரும்பாலான தமிழகர்கள்அகதிகளாகப் பல வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். தமிழகத்தில் மட்டும் சுமார் 66,000 இலங்கைத் தமிழ்அகதிகள் உள்ளனர்.
பிரபாகரனின் தந்தை வேலுப்பிள்ளை, தாயார் பார்வதி அம்மையார் ஆகியோரும் கடந்த 1990ம் ஆண்டில்அகதிகளாக இந்தியா வந்தனர். இவர்கள் திருச்சியில் இருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ள முசிறியில் தங்கவைக்கப்பட்டனர்.
முதலில் இவர்கள் திருச்சியில் தான் தங்கியிருந்தனர். ஆனால் வயதான இவர்களுக்கு நோய்வாய்ப்பட்டதால் நாட்டுவைத்திய சிகிச்சை பெறுவதற்கு வசதியாக அவர்கள் முசிறிக்கு இடம் பெயர்ந்தனர்.
தொடர்ந்து இந்தியாவில் தங்கியிருக்க கடந்த 1999ம் ஆண்டில் இவர்கள் மாநில அரசிடம் முறைப்படிவிண்ணப்பித்து அனுமதி பெற்றனர்.
பிரபாகரனின் பெற்றோர் என்ற வகையில் இவர்கள் எந்தவிதமான விவகாரங்களிலும் சிக்கியதில்லை. மிகஅமைதியான முறையில் வாழ்ந்து வருகின்றனர். இவர்களை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தான் சிலமுறைசந்தித்துள்ளார்.
இந்நிலையில் தற்போது இலங்கையில் போர் ஓய்ந்துள்ளதையடுத்து இவர்கள் இருவருமே யாழ்ப்பாணத்துக்குத்திரும்ப ஆர்வம் கொண்டு, கடந்த 10 நாட்களுக்கு முன் திருச்சி காவல்துறை தலைமையகத்தை நாடியுள்ளனர்.
ஆனால் இவர்கள் தற்போது முசிறியில் தங்கியிருப்பதால் அந்த ஊர் காவல் நிலையம் மூலமாகத் தான் அரசைத்தொடர்பு கொள்ள வேண்டும் என திருச்சி காவல்துறை கூறியுள்ளதாகத் தெரிகிறது. இதையடுத்து அவர்கள் முசிறிபோலீசாரை அணுகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையே தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் அனைவரையும் அவர்களின் தாயகமான இலங்கைக்கேதிருப்பி அனுப்பும் பொறுப்பை ஐ.நா. அமைப்பு கடந்த 1995ல் ஏற்றுக் கொண்டது. அதன்படி அவ்வப்போது நாடுதிரும்ப விரும்பும் அகதிகளை இலங்கைக்கு அனுப்பிக் கொண்டிருந்தது.
இந்நிலையில் சென்னையிலிருந்து இலங்கைக்கு நேற்று மூன்று தமிழ் அகதிகள் அனுப்பப்பட்டனர். அவர்களுடன்பிரபாகரனின் பெற்றோரும் அனுப்பப்பட்டுள்ளனர் என்று யாரோ கூறியதைத் தொடர்ந்து சென்னையில் பெரும்பரபரப்பு ஏற்பட்டது.
ஆனால் இந்தத் தகவலை ஐ.நா. அகதிகள் அமைப்பின் அதிகாரிகள் மறுத்துள்ளனர். கடைசியில் அந்தத் தகவல்வெறும் புரளி என்பதும் தெரிய வந்தது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications