அரசு உதவி கிடைக்காத ஊனமுற்ற விருதுநகர் இளைஞர் பட்டினியால் சாவு

Subscribe to Oneindia Tamil

விருதுநகர்:

தமிழக அரசின் ஊனமுற்றோர் மறுவாழ்வு நிதி கடந்த ஓராண்டுக்கும் மேலாகக் கிடைக்காத காரணத்தால்,விருதுநகர் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த ஊனமுற்ற இளைஞர் பட்டினி கிடந்தே இறந்து போனார்.

விருதுநகர் மாவட்டம் ஏழாயிரம்பண்ணை அருகே கிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்த முனியசாமி (34) என்பவர்பிறவியிலேயே உனமுற்றவர். அவருடைய தாய் முத்தம்மாள் தான் அவரைக் கவனித்து வந்தார்.

இப்பகுதியைச் சேர்ந்த ஒரு தாசில்தாரின் முயற்சியால் கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன் தமிழக அரசின்ஊனமுற்றோர் உதவித் தொகை முனியசாமிக்குக் கிடைத்தது.

ஒவ்வொரு மாதமும் அவருக்குக் குறிப்பிட்ட தொகை கிடைத்து வந்தது. தன்னுடைய தாய்க்கும் வயதாகி விட்டதால்முனியசாமி இதை மட்டுமே நம்பி வாழ்க்கை நடத்தி வந்தார்.

இந்நிலையில் கடந்த 14 மாதங்களாக வந்து சேர வேண்டிய உதவித் தொகை முனியசாமிக்கு அனுப்பப்படவில்லை.இந்தத் தொகையை எதிர்பார்த்து அவர் வெளியில் பல இடங்களில் கடனும் வாங்கியிருந்தார்.

இதற்கிடையே இது தொடர்பாக அதிகாரிகளிடம் முனியசாமியின் தாய் சென்று கேட்ட போது நிதி நெருக்கடிகாரணமாகத் தான் கடந்த 14 மாதங்களாக ஊனமுற்றோருக்கான நிதி உதவியை அரசு ஒதுக்கவில்லை என்றுஅவர்கள் கூறிவிட்டனர்.

இந்நிலையில் இனிமேல் ஊனமுற்றோர் உதவித் தொகை வராது என்று முனியசாமியிடம் சிலர் கூறியுள்ளனர்.இதைக் கேள்விப்பட்டதும் மிகவும் துக்கமடைந்த அவர் எதுவும் சாப்பிடாமல் கடந்த சில நாட்களாக அழுதுகொண்டே இருந்தாராம்.

இதனால் கடந்த செவ்வாய்க்கிழமை முனியசாமி உடல் வீங்கி இறந்து போனார்.

தமிழக அரசின் தலைமைச் செயலகம் அமைந்துள்ள சென்னை கோட்டையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கானமக்கள் தமிழகம் முழுவதிலிருந்தும் வந்து மனுக்களைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால் இவற்றில் முக்கால்வாசிக்கும் மேலான மனுக்கள் குப்பைத் தொட்டிக்குத் தான் போகின்றன என்பதும்பெரும்பாலான மக்களுக்கு நன்றாகவே தெரியும்.

இந்த லட்சணத்தில் முதல்வரைச் சந்தித்து மனு கொடுக்க முடியவில்லையே என்று கோட்டை வளாகத்திலேயேஇதுவரை ஒன்பது பேர் தற்கொலைக்கு முயன்றுள்ளனர். இவர்களில் கோயம்புத்தூரைச் சேர்ந்த வேலு-நளினிஎன்ற தம்பதியும் சென்னையைச் சேர்ந்த ஒரு டெய்லரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

சென்னை கோட்டையில் இவ்வாறு தற்கொலை முயற்சிகள் நடந்து கொண்டிருக்க, விருதுநகர் அருகே உதவித்தொகை கிடைக்காததால் ஒரு ஏழை இளைஞர் தற்கொலை செய்து கொண்டிருப்பது பெரும் சோகத்தைஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+