மக்களுக்கு பதுங்கு குழிகள்: ராணுவம் அமைக்கிறது
ஆர்.எஸ்.புரா (ஜம்மூ):
பாகிஸ்தான் பீரங்கித் தாக்குதலில் இருந்து தப்புவதற்காக இந்திய எல்லைப் பகுதி மக்களுக்கு ராணுவம் பதுங்குக்குழிகளை அமைத்துத் தர ஆரம்பித்துள்ளது.
வெறும் குழிகளாக இல்லாமல் பல பேர் தங்கியிருக்க வசதியாக சிறிய அண்டர் கிரவுண்ட் வீடுகளாகவே இவைஅமைக்கப்பட்டு வருகின்றன. ஆர்.எஸ்.புரா மாவட்டத்தில் சர்வதேச எல்லையை ஒட்டியுள்ள பீகா மற்றும்கொரோதன் கிராமங்களில் இதுவரை 17 பதுங்கு குழி வீடுகள் கட்டப்பட்டுவிட்டன.
ஆபரேசன் மர்மாலாடே என்ற பெயரில் எல்லைப் பகுதி கிராமங்களைப் பாதுகாக்கும் பயிற்சியில ராணுவம்ஈடுபட்டுள்ளது. இது போருக்கு முந்தைய பயிற்சியாகக் கருதப்படுகிறது.
ஒவ்வொரு கிராமத்திலும் 10 முதல் 15 பதுங்குக் குழி வீடுகள் கட்டப்படவுள்ளன. ராணுவ வீரர்கள், இளைஞர்கள்இணைந்து இந்த குழிகளை அமைத்து வருகின்றனர்.
எல்லைப் பகுதி கிராமங்களைச் சேர்ந்த பெண்கள், குழந்தைகளை ஏற்கனவே பாதுகாப்பான இடங்களுக்குராணுவம் குடியேற்றிவிட்டது.
ஆனால், இளைஞர்கள் தொடர்ந்து எல்லையிலேயே உள்ளனர். அவர்கள் ராணுவத்துக்கு பல வழிகளில் உதவிவருகின்றனர். இந்தப் பகுதியை நன்றாக அறிந்தவர்கள் என்பதால் போர்க் காலத்தில் இவர்களின் உதவிராணுவத்துக்கு மிக அவசியாகத் தேவைப்படும்.
இந்த பதுங்கு குழிகள் அமைக்கும் பணியை முறியடிக்க பாகிஸ்தான் ராணுவத்தினர் மிக அதிக சக்தி வாய்ந்தகுண்டுகளால் தொடர்ந்து சுட்டு வருகின்றனர். இதற்கு பதிலடித் தாக்குதல் நடத்தியவண்ணம் பதுங்கு குழிகள்அமைக்கும் வேலையையும் ராணுவம் செய்து வருகிறது.
இந்தப் பகுதியில் எல்லையில் மட்டும் 407 கிராமங்கள் உள்ளன. இந்த எல்லா கிராமங்களிலும் பதுங்குக் குழிகளைஅமைத்துத் தந்து வரும் ராணுவம் எதிரியின் துப்பாக்கிச் சூடு, பீரங்கித் தாக்குதலில் இருந்து தப்புவது எப்படிஎன்பது குறித்தும் மக்களுக்கு பயிற்சியளித்து வருகிறது.
பெர்னாண்டஸ் ஆலோசனை:
இந்திய ராணுவத்துக்கு ஆயுதங்கள், போர் விமானங்கள் தயாரிக்கும் மத்திய அரசு நிறுவனங்களின்தலைவர்களுடன் பெர்னாண்டஸ் இன்று ஆலோசனை நடத்தினார். அப்போது பாதுகாப்புத்துறை மற்றும் ராணுவஉயர் அதிகாரிகளும் உடனிருந்தனர்.
பெங்களூரில் இக் கூட்டம் நடந்தது. பின்னர் நிருபர்களிடம் பேசிய அவர்,
இந்தியாவுக்குள் பதற்றத்தை அதிகரிப்பதற்காகத் தான அணு குண்டு வீசுவோம் என பாகிஸ்தான் மிரட்டுகிறது.இதன்மூலம் இந்தியாவுக்கு வரும் அன்னிய முதலீட்டையும் தடை செய்ய திட்டமிட்டுகிறார்கள் எல்லைக்குஅப்பால் இருந்து தீவிரவாதிகள் வருவது குறையவில்லை என்றார்.
அணுகுண்டு போடுவோம் என்பது பெரிய ஜோக். அணுகுண்டு பற்றி பேசுபவர்கள் பொறுப்பில்லாதவர்கள் என்றுமுஷாரபே இப்போது சொல்லிவிட்டார். அவருக்காகவாவது நாம் பொறுப்பானவ்களாக இருப்போமே!.எல்லைக்கு அப்பால் இருந்து தீவிரவாதிகள் வருவது குறையவில்லை என்றார் பெர்னாண்டஸ்.
லஷ்கர் தீவிரவாதிகள் சுட்டுக் கொலை:
இந் நிலையில் காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் லஷ்கர்-ஏ-தொய்பா தீவிரவாதிகள் 6 பேரை ராணுவத்தினர் சுட்டுக்கொன்றனர். இதில் ஒருவன் இந்த அமைப்பின் துணை கமாண்டர் ஆவான்.
ஒரு வீட்டில் பதுங்கியிருந்த இவர்களை ராணுவத்தினர் சுற்றி வளைத்தனர். இதையடுத்து தீவிரவாதிகள் சுட்டனர்.பதிலுக்கு ராணுவத்தினர் கடும் தாக்குதல் நடத்தி இவர்களைக் கொன்றனர்.
அத்வானியுடன் அமெரிக்க தூதர் சந்திப்பு:
இதற்கிடையே மத்திய உள்துறை அமைச்சர் அத்வானி மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங்கைஇந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் ராபர்ட் பிளாக்வில் இன்று சந்திததுப பேசினார். எல்லை நிலவரம் குறித்தும்அமெரிக்க அமைச்சர்கள் இந்தியாவுடன் பேச்சு நடத்த வருவது குறித்தும் அவர் ஆலோசித்ததாகக் கூறப்படுகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications