பெங்களூரில் 100 கொத்தடிமை குழந்தைகள்: சென்னை அமைப்பு மீட்டது
சென்னை:
பெங்களூரில் கொத்தடிமைகளாக வைக்கப்பட்டிருந்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைத்தொழிலாளர்களை சென்னையைச் சேர்ந்த ஒரு தொண்டு அமைப்பு மீட்டுள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த குழந்தைத் தொழிலாளர்களுக்கு எதிரான இயக்கம் என்ற அமைப்பு இந்த பெரும் பணியைச்செய்துள்ளது.
இந்தக் குழந்தைகள் அனைவரும் மேற்கு வங்காளத்தின் ஹெளரா,ஹூக்ளி, மித்னாபூர் ஆகிய நகர்களைச்சேர்ந்தவர்கள். பெங்களூரில் தங்க நகைகளில் கைவேலைப்பாடு செய்வதற்காக இவர்கள் கொத்தடிமைகளாகவைக்கப்படிருந்தனர்.
இது குறித்து பெங்களூர் போலீசில் இந்த தொண்டு நிறுவனத்தின் ஒருங்கிணைப்பாளர் ஒஸ்ஸி பெர்னாண்டஸ்புகார் கொடுத்தார். அதிகாரிகளையும் சந்தித்துப் பேசினார்.
இதையடுத்து பெங்களூர் கலெக்டர் அஸ்வத், தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள், பெண்கள் மற்றும் குழந்தைகள்நலத்துறையினர், போலீசார் ஆகியோர் ரெய்ட் நடத்தி இந்தக் குழந்தைகளை கடந்த மாதம் 23ம் தேதி போராடி மீட்டனர்.
உடனடியாக இவர்கள் குறித்து மேற்கு வங்க அரசுக்கும் தகவல் தரப்பட்டது.
இதையடுத்து மேற்கு வங்காளத்தில் இருந்து 21 போலீசார் பெங்களூர் வந்தனர். இவர்கள் இக் குழந்தைகளைஇன்று பெங்களூர்- குவஹாத்தி எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் மேற்கு வங்காளத்துக்கு அழைத்துச் சென்றனர்.
மேற்கு வங்கம் செல்லும் வழியில் அந்த ரயில் இன்று காலை சென்னை வந்தது. அப்போது இக் குழந்தைகளைமீட்ட தொண்டு அமைப்பினர் இக் குழந்தைகலை ரயில் நிலையத்தில் சந்தித்தனர். அந்தக் குழந்தைகள் கண்ணீருடன்தொண்டு அமைப்பினருக்கு நன்றி தெரிவித்தனர்.
ரயில் நிலையத்தில் இந்தக் காட்சி அனைவரையும் கண் கலங்க வைத்தது.
இது குறித்து ஒஸ்ஸி பெர்னாண்டஸ் கூறுகையில்,
இந்த குழந்தைகள் அனைவரும் கடந்த 4 ஆண்டுகளாக ஒரு குறுகிய அறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர்.அங்கு ஜன்னல் கூட கிடையாது. இவர்களுக்கு நான்கு ஆண்டுகளாக எந்தவிதமான ஊதியமும் தரப்படவில்லை.
சாப்பாட்டிற்காக வாரம் ஒருமுறை தலைக்கு ரூ. 50 கொடுத்து வந்துள்ளனர். இவர்கள தங்க வைக்கப்பட்டிருந்தஇடத்தை விட்டு வெளியே செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் 4 வருடங்களாக அந்தக் கட்டடம் தவிரவேறெதுவும் இவர்களுக்குத் தெரியாது.
வெளியாட்கள் யாருடனும் பேசவும் இவர்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது என்றார்.
-
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்!












Click it and Unblock the Notifications