வாஜ்பாய்- முஷாரபுடன் புஷ் டெலிபோனில் பேச்சு
இஸ்லாமாபாத்:
இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் ஏற்படுவதைத் தவிர்க்கச் செய்ய அமெரிக்க வெளியுறவுத்துறை துணைஅமைச்சர் ரிச்சர்ட் ஆர்மிடேஜ் இன்று இஸ்லாமாபாத் வந்தார்.
பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல் சத்தார், வெளியுறவுத்துறைச் செயலாளர் இனாம்-உல்-ஹக்ஆகியோரை அவர் சந்தித்து பேச்சு நடத்தினார்.
பாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளர் பர்வேஸ் முஷாரபையும் அவர் இன்று சந்திக்கிறார். நாளை ஆர்மிடேஜ் இந்தியாவருகிறார்.
பாகிஸ்தான் வரும் முன் சி.என்.எனுக்கு ஆர்மிடேஜ் அளித்த பேட்டியில், அதிபர் முஷாரபிடம் மீண்டும் நான்தீவிரவாதிகளை நிறுத்துமாறு தான் கூறப் போகிறேன். அவர் நிறுத்திவிட்டதாகக் கூறுவார். ஆனால், அதைஇந்தியாவும் அமெரிக்காவும் உறுதி செய்ய வேண்டும். அந்த அளவுக்கு தீவிரவாதிகளை பாகிஸ்தான்கட்டுப்படுத்த வேண்டும்.
அதே போல இந்தியத் தலைவர்களுடன் பொறுமை காக்க வேண்டும் என்று வலியுறுத்துவேன். சூப்பர் பவர் நாடுஎன்ற நிலையை அடைய இந்தியா நினைக்கிறது. விரைவில் அந்தக் கனவை இந்தியா எட்டிவிடும் என்று தான்அமெரிக்காவும் நினைக்கிது. ஆனால், அந்தக் கனவை எட்ட வேண்டுமானால் பொறுமையும் மிக அவசியம்என்பதை இந்தியாவிடம் எடுத்துக் கூறுவேன் என்றார்.
காஷ்மீரில் அமெரிக்க படை?
இதற்கிடையே பாகிஸ்தானில் இருந்து தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவதைத் தடுக்கவும் தீவிரவாதிகள்நடமாட்டத்தைக் கண்காணிக்கவும் அமெரிக்க- பிரிட்டிஷ் கூட்டுப் படைகளைக் கொண்டு ஹெலிகாப்டர்களில்எல்லையைக் கண்காணிக்க அமெரிக்கா யோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.
இந்தியாவும் பாகிஸ்தானும் ஒப்புக் கொண்டால் இந்த கூட்டுப் படைகளை அனுப்ப அமெரிக்காதிட்டமிட்டுள்ளதாகவும் இது குறித்து அடுத்த வாரம் டெல்லி மற்றும் இஸ்லாமாபாத் செல்லும் அமெரிக்கபாதுகாப்புத்துறை அமைச்சர் டோனால்ட் ரம்ஸ்பீல்ட் இரு நாட்டுத் தலைவர்களுடனும் பேச்சு நடத்துவார் என்றுதெரிகிறது.
இரு நாடுகளும் ஒப்புக் கொண்டால் இந்த ஹெலிகாப்டர் படையினர் எல்லைக்கு வருவர்.
பாகிஸ்தானுக்கு புஷ் கண்டிப்பு:
இந் நிலையில் தீவிரவாதிகளை உடனே கட்டுப்படுத்துமாறும் அவர்கள் இந்தியாவில் ஊடுருவதைத் தடுக்குமாறும்பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரபிடம் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் நேற்று மாலை தொலைபேசியில்வலியுறுத்தினார்.
தொலைபேசி பேச்சின்போது புஷ் மிகக் கடுமையாக பேசியதாக நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை தெரிவிக்கிறது.
வாஜ்பாயுடன் புஷ் பேச்சு:
முஷாரபிடம் பேசிய பின்னர் 5 மணி நேரம் கழித்து இந்தியப் பிரதமர் வாஜ்பாயுடன் புஷ் தொலைபேசியில்பேசினார். பாகிஸ்தானை அமெரிக்கா நிர்பந்தப்படுத்தி வருவதாகவும் எல்லையில் அமைதி திரும்ப உதவுமாறுமஅவர் வாஜ்பாயிடம் கேட்டுக் கொண்டார்.
நேட்டோ- ரஷ்யா ஆலோசனை:
பிரஸல்ஸ் நகரில் இன்று தொடங்கும் நடக்கும் நேட்டோ நாடுகள், ரஷ்ய கூட்டுக் கூட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான்விவகாரம் தான் முக்கியமாக பேசப்பட உள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications