ஜனாதிபதி பதவி: ஜெவுடன் வாஜ்பாய் பேச்சு
சென்னை:
அடுத்த ஜனாதிபதியை தேர்வு செய்வது குறித்து பிரதமர் வாஜ்பாய் இன்று முதல்வர் ஜெயலலிதாவுடன்தொலைபேசியில் ஆலோசனை நடத்தினார்.
இது குறித்து நிருபர்களிடம் ஜெயலலிதா கூறுகையில்,
இன்று என்னுடன் பிரதமர் பேசினார். ஒரு பெயரைச் சொல்லி அவரை அடுத்த ஜனாதிபதியாக்க ஆதரவுதருவீர்களா என்று கேட்டார். நீங்கள் யாரை சொல்கிறீர்களோ அவரை ஆதரிக்கத் தயார் என்று கூறிவிட்டேன்என்றார்.
யாருடைய பெயரை பிரதமர் குறிப்பிட்டார் என்று கேட்டபோது. என்னிடம் பிரதமர் குறிப்பிட்ட பெயரை நான்வெளியிடுவது முறையல்ல என்று ஜெயலலிதா பதிலளித்தார்.
அவர் தொடர்ந்து பேசுகையில், என்னுடன் நேற்றிரவு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் பேசினார்.
கடந்த மே மாதம் 31ம் தேதியே என்னிடம் அடுத்த ஜனாதிபதிக்கு ஒருவரது பெயரைக் கூறி ஆதரவு கேட்டார்பிரதமர் வாஜ்பாய். ஆனால், அப்போது வாஜ்பாய் சொன்னவரை ஆதரிக்க முடியாது என்று கூறிவிட்டேன். அந்தப்பெயரையும் நான் வெளியிட மாட்டேன் என்றார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications