ஏழைப் பெண்களின் வாழ்வில் விளையாடும் தமிழக அரசு
சென்னை:
கடும் நிதி நெருக்கடியில் உள்ள தமிழக அரசு ஏழைப் பெண்களின் திருமண உதவித் திட்டத்துக்கும் பணம்ஒதுக்காமல் இருந்து வருகிறது. இதனால் சுமார் 1 லட்சம் பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த சில மாதங்களாகவே பல்வேறு அரசுத் திட்டங்ளும் பணம் இல்லாமல் முடங்கிப் போய் உள்ளன. வளர்ச்சிப்பணிகள் அடியோடு நின்று போய்விட்டன.
ஆனால், ஏழைகளுக்கு உதவும் மிக அடிப்படையான சில திட்டங்களிலேயே தமிழக அரசு இப்போது கைவைத்துள்ளது.
ஊனமுற்றவர்களுக்கு உதவும் நலத் திட்டங்களுக்கு நிதி வழங்கப்படாததால் ஆயிரக்கணக்கான ஊனமுற்றவர்கள்பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த உதவித் தொகை நிறுத்தப்பட்டுவிட்டது. இதை நம்பிவாழ்ந்து வந்த ஊனமுற்றவர்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.
அதே போல அனாதைக் குழந்தைகளுக்கான பல்வேறு நலத் திட்டங்களிலும் மண் விழுந்துள்ளது.
இந் நிலையில் ஏழைப் பெண்களின் திருமண உதவித் திட்டத்திற்கும் அரசு நிதி ஒதுக்காமல் இருந்து வருகிறது.திருமண உதவி கோரி ஏழைப் பெண்கள் சுமார் 1 லட்சம் பேர் தந்த மனுக்கள் அரசு அலுவலகங்களில் குவிந்துகிடக்கின்றன.
குடும்ப வருமானம் மாதம் ரூ. 1,000க்கு கீழ் உள்ள குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் 8ம் வகுப்பு வரைபடித்திருந்தால் அந்தப் பெண்ணில் திருமணச் செலவுக்கு அரசு ரூ. 5,000 தந்து வந்தது.
இதன்மூலம் ஏழைகளும் தங்கள் வீட்டுப் பெண் குழந்தைகளை எப்பாடுபட்டாவது படிக்க வைத்துவிட வேண்டியநிலைக்கு உந்தப்பட்டனர். அந்தப் பெண் 8ம் வகுப்பு படித்தால் தான் திருமண உதவி கிடைக்கும் என்பதால் பலகுடும்பத்தினர் தங்கள் வீட்டு பெண் குழந்தைகளையும் படிக்க வைத்து வருகின்றனர்.
பெண்ணுக்குக் கல்வி கிடைக்கச் செய்யும் வகையில் இந்தத் திருமண உதவித் திட்டத்தை திமுக ஆட்சி காலத்தில்கருணாநிதி கொண்டு வந்தார்.
திமுக கொண்டு வந்த திட்டம் என்பதால் இதை அதிமுக கண்டுகொள்ளவில்லை. இந் நிலையில் அரசிடம் பணம்இல்லை என்று கூறி திட்டத்துக்கு நிதி ஒதுக்குவதையும் அரசு நிறுத்தியுள்ளது. கடந்த ஓராண்டாகவே இத் திட்டம்கிடப்பில் போடப்பட்டுள்ளது.
அரசிடம் இருந்து பணம் வரும் என்று எதிர்பார்த்து கடனை வாங்கி திருமணம் செய்து கொடுத்துவிட்டு தாசில்தார்அலுவலகத்துக்கும் வீட்டுக்குமாக பல ஏழைப் பெற்றோர்கள் அலைந்து வருகின்றனர்.
ஆனால், முதல்வர் ஜெயலலிதா தேர்தலில் போட்டியிட்ட ஆண்டிப்பட்டியை உள்ளடக்கிய தேனி மாவட்டத்தில்மட்டும் கடந்த ஆண்டு சுமார் ரூ. 80 லட்சம் இந்தத் திட்டத்துக்காக செலவிடப்பட்டது. ஜெயலலிதாவின் வெற்றிபாதிக்கப்பட்டுவிடாது என்பதற்காக இஙகு மட்டும் இத் திட்டத்தை செயல்பட்டு வந்துள்ளது அரசு.












Click it and Unblock the Notifications