பேச்சுவார்த்தைக்கு இடையூறு செய்ய வேண்டாம்: ஜெயலலிதாவிடம் ரணில் கோருவார்
டெல்லி:
இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே இன்று டெல்லியில் பிரதமர் வாஜ்பாயைச் சந்தித்துப் பேசுகிறார்.
விடுதலைப் புலிகளுடனான பேச்சுவார்த்தை, தமிழர்களுக்கு தரப்படவுள்ள உரிமைகள், புலிகள் மீதான தடைநீக்கம் மற்றும் இந்திய- இலங்கை வர்த்தகம் ஆகியவை குறித்து வாஜ்பாயுடன் அவர் ஆலோசனை நடத்துவார்.
இலங்கை விவகாரத்தில் இந்தியா தலையிட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்துவார் என்று தெரிகிறது. இலங்கைவிவகாரத்தில் தலையிடுவதில்லை என்ற நிலைலை இந்தியா எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
புலிகளுடனான பேச்சுவார்த்தைய ஆதரிக்காத அதிபர் சந்திரிகா இந்தியா வந்து வாஜ்பாயைச் சந்தித்து புலிகளைதொடர்ந்து எதிர்க்குமாறு கேட்டுக் கொண்டார்.
புலிகளுடன் பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ள ரணில் விக்கிரமசிங்கே வாஜ்பாயைச் சந்தித்து இலங்கைவிவகாரத்தில் இந்தியா தனது நிலையை மாற்றிக் கொள்ள வேண்டும் என வலியுறுத்துவார்.
நேற்று முன்தினம் இந்தியா வந்த அவர் பெங்களூரில் தங்கினார். சத்யசாய் பாபாவை சந்தித்து ஆசி பெற்றார்.நேற்று இன்போசிஸ் உள்ளிட்ட சாப்ட்வேர் நிறுவனங்களைப் பார்வையிட்ட அவர் இலங்கையில் இந்தநிறுவனங்கள் கிளைகளை ஆரம்பிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
இன்போசிஸ் நிறுவனத்தின் எம்.டி. நந்தன் நீலேகனியையும் சந்தித்துப் பேசினார்.
பின்னர் கர்நாடக ஆளுநர் அளித்த விருந்தில் கலந்து கொண்டார். இன்று அவர் பெங்களூரில் இருந்து டெல்லிசெல்கிறார். ஜனாதிபதி கே.ஆர்.நாராயணன், பிரதமர் வாஜ்பாய் தவிர உள்துறை அமைச்சர் அத்வானி,வெளியுறவுத்துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங் ஆகியோரை சந்தித்துப் பேசுகிறார்.
சோனியாவுடன் சந்திப்பு:
அவர் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியையும் சந்தித்துப் பேச திட்டமிட்டுள்ளார். அப்போது ராஜிவ் காந்திகொலை வழக்குத் தொடர்பாக புலிகளின் தலைவர் பிரபாகரனை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் எனசோனியா காந்தி கோரிக்கை விடுப்பார் என்று தெரிகிறது.
ஏற்கனவே இது தொடர்பாக சமீபத்தில் நடந்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக் கூட்டத்தில் தீர்மானம்நிறைவேற்றப்பட்டுள்ளது.
வாழப்பாடி கோரிக்கை:
தன்னைச் சந்திக்கும் ரணில் விக்கிரமசிங்கேயிடம் பிரபாகரனை இந்தியாவிடம் ஒப்படைக் கோரி பிரதமர் வாஜ்பாய்வலியுறுத்த வேண்டும் என முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தி கோரிக்கைவிடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வாஜ்பாய்க்கு தந்தி அனுப்பியுள்ளார்.
அதே போல இன்று சென்னையில் இருந்தவாரே முதல்வர் ஜெயலலிதாவுக்கும அவர் இந்த கோரிக்கையைவலியுறுத்தி தந்தி அனுப்பியுள்ளார்.
பலத்த பாதுகாப்பு:
பெங்களூரில் இருந்த ரணில் விக்கிரமசிங்கேவுக்கு மிக பலத்த பாதுகாப்பு தரப்பட்டது. அவர் சென்ற வழிகளில்எல்லாம் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. சாலை முழுவதும் 50 அடிக்கு ஒரு போலீஸ்காரர் நிறுத்தப்பட்டிருந்தார்.
ஜெயலலிதாவுடன் சந்திப்பு:
நாளை சென்னை வரும் ரணில் விக்கிரமசிங்கேவுக்கு ஆளுநர் ராம்மோகன் ராவ் விருந்தளிக்கிறார். அப்போதுஅவரை ஜெயலலிதா சந்தித்துப் பேசுகிறார்.
இந்த சந்திப்பின்போது, இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு காணப்படவுள்ள அமைதித் தீர்வுக்கு இடையூறாக எந்த நடவடிக்கையும் எடுக்கவேண்டாம் என அவர் ஜெயலலிதாவை கேட்டுக் கொள்வார் என்று தெரிகிறது.
விக்கிரமசிங்கே வருகையையடுத்து தனது டெல்லிப் பயணத்தை ஒரு நாள் தள்ளிப் போட்டிருக்கிார் ஜெயலலிதா.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications