தூத்துக்குடி: குடிநீர் வழங்குவதில் 1 கோடி ஊழல்
தூத்துக்குடி:
தூத்துக்குடி நகராட்சியில் பொது மக்களுக்கு குடிக்கத் தண்ணீர் வழங்குவதில் கூட ரூ. 1 கோடி அளவுக்கு ஊழல்செய்யப்பட்டுள்ளது.
லாரிகளை வாடகைக்கு எடுப்பதில் டெண்டர் விட்டதில் இந்த சுருட்டல் நடந்துள்ளது.
தமிழகத்தின் பல நகர்களைப் போல எப்போதும் தண்ணீர் பஞ்சத்தில் சிக்கித் தவித்து வரும் நகரம் தூத்துக்குடி.இங்கு பல ஆண்டுகளாக லாரிகள் மூலம் தான் மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
நகராட்சியிடம் போதுமான லாரிகள் இல்லாததால் தனியாரின் லாரிகளும் காண்ட்ராக்ட் எடுக்கப்பட்டுபயன்படுத்தப்பட்டு வருகின்றன.
வழக்கமாக லாரிகளை காண்ட்ராக்டில் வாடகைக்கு எடுக்கும்போது திறந்த டெண்டர் விடப்படும். பத்திரிக்கைகளில்அறிவிப்பு வெளியிடப்படும். இதைப் பார்த்து பலரும் போட்டியிடுவர். யார் குறைந்த வாடகைக்குத் தர முன்வருகிறார்களோ அவர்களிடம் நகராட்சி லாரிகளை வாடகைக்கு எடுக்கும்.
ஆனால், கடந்த 1996 முதல் 2001ம் ஆண்டு வரை லாரிகளை வாடகைக்கு எடுக்க திறந்த முறையில் டெண்டரேவிடப்படவில்லை என்று தெரிகிறது. தங்களுக்கு வேண்டிய 2 லாரி உரிமையாளர்களிடம் மட்டும் இந்த லாரிகளைவாடகைக்கு எடுத்து இயக்கி வந்துள்ளது நகராட்சி.
இதற்காக இந்த இரு லாரி உரிமையாளர்களும் நகராட்சித் தலைவர், அதிகாரிகளுக்கு பெரும் அளவில் லஞ்சம்தந்திருப்பதாகவும் தெரிகிறது.
லஞ்சத்தை வாங்கிக் கொண்ட இந்த கூட்டுக் கொள்ளைக் கும்பல் லாரிகளுக்கு அதிக வாடகையும் அள்ளித்தந்துள்ளனர். இதனால் நகராட்சிக்கு சுமார் ரூ. 1.10 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த பணத்தை லாரி உரிமையாளர்கள், இடைத் தரகர்கள், நகராட்சியின் அதிகாரத்தில் இருந்த அரசியல்வாதிகள்,அதிகாரிகள், ஊழியர்கள் பங்கு போட்டுள்ளனர்.
இந்த விவகாரம் இப்போது தான் வெளியே வர ஆரம்பித்துள்ளது. இது தொடர்பாக குற்றப் புலனாய்வுப் பிரிவுபோலீசார் விசாரணை நடத்த வேண்டும் என நகராட்சியின் இப்போதைய தலைவர் டேனியேல் ராஜ் கோரிக்கைவிடுத்துள்ளார்.
நகராட்சிக்குச் சொந்தமான கடைகளில் வாடகை வசூலிக்கப்பட்டது தொடர்பான பல பைல்களும் இங்கு காணாமல்போயுள்ளன. இதனால் வாடகை வசூலிலும் பெரும் அளவில் ஊழல் நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த ஊழல்வெளியில் தெரியாமல் இருப்பதற்காக வாடகை, வசூல் தொடர்பான கோப்புகளை அரசியல்வாதிகளும்,அதிகாரிகளும் அபேஸ் செய்து அழித்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாகவும் விசாரணை நடத்த வேண்டும் என டேனியேல் ராஜ் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து இன்று தூத்துக்குடி நகர்மன்றத்தில் தீர்மானமும் நிறைவேற்றப்படவுள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications