பதவிப் பறிப்பு நோட்டீஸ் வந்தது: ஸ்டாலின் என்ன செய்யப் போகிறார்?
சென்னை:
பதவிப் பறிப்பு குறித்து மு.க. ஸ்டாலினுக்கு தமிழக அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
நேற்று மாலை அனுப்பப்பட்ட இந்த நோட்டீசில் மேயராக தொடரப் போகிறீர்களா? எம்.எல்.ஏவாக இருக்கப்போகிறீர்களா என்பதை 5 நாட்களுக்குள் தெரியப்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இல்லாவிட்டால்அரசே பதவியைப் பறிக்கும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஸ்டாலினைக் குறி வைத்து ஒருவருக்கு ஒரு பதவி சட்டத்தை முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்தார். இதற்குஆளுநர் ராம்மோகன் ராவின் ஒப்புதலும் பெறப்பட்டது. இதையடுத்து இந்தச் சட்டம் அரசு கெசட்டில் (அரசுஆணை) வெளியிடப்பட்டது.
இதைத் தொடர்ந்து 14 நாட்களுக்குள் ஏதாவது ஒரு பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயத்துக்குஸ்டாலின் உள்ளானார். அவர் இம் மாதம் 18ம் தேதிக்குள் இதற்கான முடிவெடுக்க வேண்டும். இதற்கு இன்னும் 5நாட்கள் தான் உள்ளன.
ஆனால், ஸ்டாலின் ராஜினாமா செய்வாரா இல்லையா என்பது தெரியவில்லை. முதலில் எம்.எல்.ஏ. பதவியைஉதறிவிட்டு மேயராக தொடர்ந்து அரசுடன் நேரடியாக மோதுவது என்று ஸ்டாலின் முடிவெடுத்தார்.
இதன் பின்னர் எந்தப் பதவியையும் ராஜினாமா செய்யாமல் சும்மா இருப்பது. அரசு தனது பதவியைப் பறித்த பின்போராட்டம் நடத்துவது என்ற முடிவுக்கு வந்தார்.
இந் நிலையில் 18ம் தேதியன்று நீதிமன்றத்தில் தடை வாங்கி பதவிப் பறிப்பை நிறுத்தி வைத்து சட்டப்படிபோராடுமாறு அவருக்கு யோசனை தரப்பட்டுள்ளது.
அரசுச் செயலாளரிடம் இருந்து ஸ்டாலினுக்கு இரு நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டுள்ளன. மேயர் என்ற முறையில்மாநகராட்சிக்கும், எம்.எல்.ஏ. என்ற முறையில் கட்சியின் அலுவலகத்துக்கும் இந்த நோட்டீஸ்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications