திங்கள்கிழமை மனு தாக்கல்?
Subscribe to Oneindia Tamil
குடியரசுத் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் அப்துல் கலாம் திங்கள்கிழமை டெல்லி செல்கிறார். அன்றையதினமே அவர் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்வார் என்று தெரிகிறது.
பிரதமர் அலுவலகத்துறை துணை அமைச்சர் விஜய் கோயல் நேற்று சென்னை வந்து அப்துல் கலாமை சந்தித்துஆலோசனை நடத்தினார். பின்னர் நிருபர்களிடம் பேசிய அவர், திங்கள்கிழமை கலாம் சென்னையிலிருந்து டெல்லிசெல்வார் என்றார்.
இவரை எதிர்த்து கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் போட்டியிடும் லட்சுமி செகலும் திங்கள்கிழமை மனுத் தாக்கல்செய்வார் என்று தெரிகிறது.
இந் நிலையில் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட இதுவரை மொத்தம் 9 பேர் வேட்பு மனுத் தாக்கல்செய்துள்ளனர். இதில் 5 பேரின் மனுக்கள் ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டன. மற்ற 4 மனுக்களும்தள்ளுபடியாகிவிடும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications