கலகலக்குது abdulkalam.com
சென்னை:
பாரத ரத்னா அப்துல்கலாமின் இணைய தளத்தில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாழ்த்துச் செய்திகள் லந்து குவிந்த வண்ணம் உள்ளன.
தன்னிடம் கேள்வி கேட்டு இ- மெயில் அனுப்பும் அனைவருக்கும் பதில் அனுப்பி விடுவதில் தீவிரமாக இருப்பவர் கலாம். ஆனால், இந்த முறைஅவரால் சமாளிக்க முடியவில்லை. ஆயிரக்கணக்கான கேள்விகளும், வாழ்துக்களும் மெயில்களாக வந்து குவிந்துள்ளன.
இதனால் மிகவும திணறிப் போன அப்துல் கலாம் பெங்களூரில் உள்ள ஏரோநாட்டிகல் டெவலப்மென்ட் ஏஜென்சியில் பணியாற்றும் தனது சிஷ்யர்பொன்ராஜை உடனே சென்னை வருமாறு அழைத்துளார். பொன்ராஜ் என்ற இந்தத் தமிழர் தான் இந்த வெப்சைட்டை டிசைன் செய்து நடத்தி வருகிறார்.
கடந்த ஆண்டு அக்டோபர் 15ம் தேதி அப்துல் கலாமின் பிறந்த நாளன்று இந்த இணைய தளம் துவக்கி வைக்கப்பட்டது.
கடந்த சில நாட்களாக அவரது ஈ மெயில் "பாக்ஸ்" நிரம்பி வழிகிறதாம். தினசரி ஆயிரக்கணக்கான ஈ மெயில்கள் உலகின் பல பகுதிகளிலிருந்தும் வந்தவண்ணம் உள்ளதாம். அத்தனை பேருக்கும் நன்றி தெரிவிக்க கலாம் முடிவு செய்துள்ளார். இந்த வேலையை செய்யத் தான் பொன்ராஜை சென்னைக்கு வரச்செய்துள்ளார்.
கலாமின் இந்த இணையத் தளத்தின முகவரி: www.abdulkalam.com


Click it and Unblock the Notifications
