தமிழக அரசிடமிருந்து இதுவரை புகார் கடிதம் வரவில்லை: மத்திய அரசு
டெல்லி:
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மீது தமிழக முதல்வர் ஜெயலலிதா புகார் கூறி அனுப்பப்பட்டதாகக்கூறப்படும் கடிதம் இதுவரை மத்திய அரசுக்கு வந்து சேரவில்லை என்றும் அது வந்த பிறகே மேற்கொண்டுநடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய உள்துறை இணை அமைச்சர் ஐ.டி. சுவாமி கூறினார்.
டெல்லியில் நேற்று இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
வைகோ மீதான புகார் குறித்து இதுவரை உள்துறை அமைச்சகத்துக்கு எந்தவிதமான கடிதமும் தமிழகஅரசிடமிருந்து வரவில்லை.
விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக வைகோ பேசியதாகவும் இதனால் அவரைப் பொடா சட்டத்தின் கீழ் கைதுசெய்வதைத் தவிர வேறு வழியில்லை என்றும் தமிழக அரசு கூறியுள்ளது.
இது தொடர்பாக துணைப் பிரதமரும் மத்திய உள்துறை அமைச்சருமான அத்வானிக்கு ஜெயலலிதாவுக்குக் கடிதம்அனுப்பப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்தக் கடிதம் வந்த பிறகே மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். வைகோவைக் கைது செய்ய மத்தியஅரசிடம் தமிழக அரசு அனுமதி கேட்டால், முதலில் வைகோவிடம் இது தொடர்பாக விளக்கம் கேட்போம்.
வைகோ என்ன பேசினார் என்றும் எந்த நோக்கத்தில் அவ்வாறு பேசினார் என்றும் கேட்போம்.
ஆனால் வைகோவைக் கைது செய்ய வேண்டும் என்று எந்தவிதமான அனுமதியும் கேட்காமல் வெறும்தகவலுக்காக மட்டும் அனுப்பினால் அதை வைத்துக் கொண்டு மத்திய அரசால் ஒன்றும் செய்ய முடியாது.
சட்டம்-ஒழுங்கு என்பது அந்தந்த மாநிலம் சம்பந்தப்பட்ட பிரச்சனை. அவற்றைக் கையாளும் உரிமையும்அதிகாரமும் அந்தந்த மாநிலத்திடம் தான் உள்ளது.
ஆனாலும் புலிகள் தொடர்பாக வைகோ பேசியதன் விவரம் வீடியோ ஆதாரத்துடன் இருந்தால் அது கொஞ்சம்சீரியசான விஷயம் தான் என்றார் சுவாமி.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications