For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திருவாவடுதுறை: மூத்த மடாதிபதியை கொல்ல சதி செய்த இளைய மடாதிபதி கைது

By Staff
Google Oneindia Tamil News

தஞ்சாவூர்:

திருவாவடுதுறை ஆதீனத்தின் மூத்த மடாதிபதியைக் கொல்ல இளைய மடாதிபதி தான் சதி செய்தார் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து அவர் இன்று கைது செய்யப்பட்டார்.

இச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாகப்பட்டிணம் அருகே உள்ள குத்தாலம் திருவாடுதுறை ஆதீன மடம் உள்ளது. இந்த மடத்துக்கு தமிழகம் முழுவதும் ரூ. 300 கோடிமதிப்புள்ள சொத்துக்கள் உள்ளன. மேலும் காசியில் ஆரம்பித்து திருநெல்வேலி வரை ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களும் உள்ளன.தமிழகத்தின் முக்கியமான சைவ மடங்களில் இதுவும் ஒன்று.

இந்த மடத்தின் பெரிய மடாதிபதியாக சிவப்பிரகாச தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் இருந்து வருகிறார்.

இளைய மடாதிபதியாக காசி விஸ்வநாத பண்டார சுவாமிகள் இருந்து வருகிறார்.

கொல்ல முயற்சி...

கடந்த 7ம் தேதி பெரிய பண்டாரம் என்று மக்களால் அன்புடன் அழைக்கப்படும் பெரிய மடாதிபதியைக் கொல்ல மடத்துக்குள்ளேயேமுயற்சி நடந்தது. அவரது ஓய்வு அறைக்குள் நுழைந்த 4 பேர் மர்மக் கும்பல் அங்கு கட்டிலுக்கு அடியில் பதுங்கி இருந்தது. அப்போதுபெரிய மடாதிபதி அங்கு இல்லை. அவரது வருகைக்காக அந்தக் கும்பல் காத்திருந்தது.

அப்போது மடாதிபதியின் மெய்காப்பாளர் அந்த அறைக்குள் நுழைந்தார். அவர் இந்தக் கும்பலைப் பார்த்துவிட்டார். உடனே அவர்களைப்பிடிக்க முயன்றார். ஆனால், அந்தக் கும்பல் தப்பியோடிவிட்டது.

ஆனால், அந்தக் கும்பல் கொண்டு வந்த விஷ ஊசி, தலையணை, கையுறைகள் ஆகியவற்றை அங்கேயே விட்டுவிட்டுத் தப்பியது.

இதனால் மடாதிபதியை தலையணையை வைத்து மூச்சு முட்டச் செய்து விஷ ஊசியையும் போட்டுக் கொலை செய்ய அக் கும்பல்திட்டமிட்டிருந்தது தெரியவந்தது.

இளைய மடாதிபதி தற்கொலை முயற்சி:

இது குறித்து வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரித்து வந்தனர். அப்போது இந்தக் கொலையில் இளைய மடாதிபதிக்குதொடர்பிருக்கலாம் என்று சந்தேகம் எழுந்தது.

இந் நிலையில் இளைய மடாதிபதி திடீரென அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகள் சாப்பிட்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றார்.ஆனால், மயங்கிய நிலையில் கிடந்த அவரை மடத்தின ஊழியர்கள் மருத்துவமனையில் சேர்த்ததால் உயிர் பிழைத்தார். தன் மீதுஎல்லோரும் சந்தேகப் பார்வை வீசுவதால் இந்தத் தற்கொலைக்கு முயன்றதாக போலீசாரிடம் அவர் கூறினார்.

முன்னாள் ஊழியர் உள்பட 5 பேர் கைது:

இந் நிலையில் கொலையாளிகளைப் பிடிக்க அமைக்கப்பட்ட தனிப் படை போலீசார் மடத்தில் வேலை செய்த சாமிநாதன், தியகராஜன்ஆகிய 2 ஊழியர்கள் உள்பட 5 பேரைக் கைது செய்தனர்.

இதில் சாமிநாதன், தியாகராஜன் ஆகிய இருவரையும் சமீபத்தில் பெரிய மடாதிபதி சமீபத்தில் இடமாற்றம் செய்தார். இதனால் அவர்கள்அதிருப்தியில் இருந்தனர்.

கூலிப் படையின் மூன்றாவது நபரான தமிழ்ச்செல்வன் தனது மனைவியை மடத்துக்கு சொந்தமான பள்ளியில் ஆசிரியையாக சேர்க்கமுயன்றார். இதற்கு மடாதிபதி ஒப்புக் கொள்ளவில்லை. இதனால் இவர் மடாதிபதி மீது அதிருப்தியுடன் இருந்தார்.

இவர்கள் தவிர சக்திவேல், சிவக்குமார் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த இருவரும் பணத்துக்காக இந்தக் கொலைசெய்ய முன் வந்தவர்கள். இந்தக் கும்பலுக்கு தலைவனாக சக்திவேல் இருந்துள்ளார்.

இவர்களிடம் விசாரணை நடத்தியபோது இளைய மடாதிபதி தான் இந்தக் கொலைக்கு சதித் திட்டம் தீட்டியதாத் தெரியவந்துள்ளது.சொத்துக்களை அபகரிக்கவும், மூத்த மடாதிபதி பதவியைப் பிடிக்கவும் இளைய மடாதிபதி இந்த சதித் திட்டம் போட்டுள்ளார்.

மேலும் இந்தக் கும்பலை தனது அறையில் பதுங்கியிருக்கச் செய்தும் இளைய மடாதிபதி உதவி செய்திருக்கிறார்.

தூக்க மாத்திரை சாப்பிட்டு மயங்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளைய மடாதிபதி இன்று கைது செய்யப்பட்டார்.

மூத்த மடாதிபதி மீது இளையவர் புகார்:

இந் நிலையில் இளைய மடாதிபதி காசி விஸ்வாநாதனை கொலைப் பழியில் சிக்க வைக்க மூத்த மடாதிபதி சதி செய்வதாகவும் புகார்எழுந்துள்ளது. பிடிபட்ட 5 பேருக்காக ஆஜராகும் வழக்கறிஞர் இந்தக் குற்றச்சாட்டைக் கூறியுள்ளார்.

ஆனால், கைது செய்யப்பட்ட 5 பேரும் இளைய மடாதிபதியின் தூண்டுதலால் தான் இந்தக் கொலை முயற்சியில் ஈடுபட்டதாக வாக்குமூலம்தந்துள்ளனர். இதையடுத்து அவரை மருத்துவமனையில் வைத்தே போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கில் மேலும் 4 பேரையும் இன்று போலீசார் கைது செய்தனர். இவர்களும் 5 பேர் கூலிப் படைக்கு உதவியாக இருந்ததுதெரியவந்துள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X