சென்னை கொள்ளைகளில் போலீசாருக்குத் தொடர்பு?
சென்னை:
சென்னையில் கடந்த சில மாதங்களாக நடந்து வரும் தொடர் கொள்ளைச் சம்பவங்களில் சில போலீசாருக்குதொடர்பிருப்பது தெரியவந்ததுள்ளது.
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கடந்த சில மாதங்களாகத் தொடர்ந்து கொள்ளைச் சம்பவங்கள் நடந்துவந்தன. இப்போதும் கூட அங்கொன்றும் இங்கொன்றுமாகக் கொள்ளைச் சம்பவங்கள் நடந்து கொண்டு தான்இருக்கின்றன.
இதற்கிடையே சமீபத்தில் சென்னை-எழும்பூர் பகுதியில் தங்க பிஸ்கெட்டுகளை வாங்கி விற்பனை செய்து வரும்சீனிவாசன் என்பவரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் போல் நடித்த சிலர் ரூ.40.5 லட்சத்தை மோசடி செய்து எடுத்துச்சென்று விட்டனர்.
அதன் பிறகே பணத்தை "அடித்துச்" சென்றவர்கள் சி.பி.ஐ. அதிகாரிகள் இல்லை என்ற விவரம் தெரிய வந்தது.இதையடுத்து போலீசாரிடம் சீனிவாசன் புகார் கொடுத்தார்.
இந்தக் கும்பலைப் பிடிப்பதற்காகத் தனிப் படை அமைத்து அவர்களைப் போலீசார் தீவிரமாகத் தேடி வந்தனர்.அப்போது தான் இந்தச் சம்பவத்திற்கும் ஆவடியில் உள்ள தமிழக சிறப்புக் காவல் படையில் பணிபுரியும்சப்-இன்ஸ்பெக்டர் குழந்தைசாமிக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து குழந்தைசாமியிடம் தனிப் படைப் போலீசார் விசாரித்த போது, அவர் தலைமையிலான மூன்றுபோலீசார் தான் சி.பி.ஐ. அதிகாரிகள் போல "சபாரி" ஆடையெல்லாம் போட்டுக் கொண்டு சீனிவாசனிடம் ரூ.40.5லட்சத்தைக் கொள்ளையடித்தது தெரிய வந்தது.
குழந்தைசாமியை உடனடியாகக் கைது செய்த போலீசார் மற்ற மூன்று போலீசாரையும் தேடி வருகின்றனர்.
இதற்கிடையே கோயம்புத்தூரைச் சேர்ந்த நகை வியாபாரியான சுரேஷ் என்பவரிடமும் சென்னை-பெரவள்ளூர்குற்றப் பிரிவு சப்-இன்ஸ்பெக்டரான மாரிச்சாமி தலைமையிலான நான்கு போலீசார் ரூ.4 லட்சம் வரை பணத்தைஏமாற்றிப் பறித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் நடைபெற்றதிலிருந்தே இந்த நான்கு போலீசாரும் விடுமுறை போட்டுக் கொண்டு தலைமறைவாகிவிட்டனர். இவர்களைத் தனிப் படைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இந்த இரு சம்பவங்களையும் அடிப்படையாகக் கொண்டு சென்னையில் சமீப காலமாக நடந்து வரும் தொடர்கொள்ளைகளுக்கும் போலீசாருக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்திலும் தீவிர விசாரணை நடந்துவருகிறது.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications