வைகோ கைது பொடா சட்டத்துக்கே எதிரானது: பா.ஜ.க.
டெல்லி:
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கைது செய்யப்பட்டுள்ளது பொடா சட்டம் கொண்டு வரப்பட்டதன்நோக்கத்திற்கே எதிரானது என்று அகில இந்திய பா.ஜ.க. தலைவர் வெங்கையா நாயுடு கூறினார்.
டெல்லியில் "தினமணி" பத்திரிக்கைக்கு அவர் அளித்த பேட்டியின் போது கூறியதாவது:
பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள வைகோவை பா.ஜ.க. கைவிட்டுவிட்டதாகக் கூறப்படுவது தவறு.
விடுதலைப்புலிகளையும் தமிழ் ஈழத்தையும் ஆதரிப்பதை நாங்கள் ஏற்கவில்லை. ஆனால் ஒரு இயக்கத்தைப்பற்றிப் பேசியதற்காக பொடா சட்டத்தின் கீழ் கைது செய்ய முடியாது. அது அந்தச் சட்டத்தை கொண்டு வந்ததன்நோக்கத்திற்கே எதிரானதாகும். நியாயமற்றதும் கூட.
வைகோவை கைது செய்த தமிழக அரசை பா.ஜ.கவும் தேசிய ஜனநாயகக் கூட்டணியும் கண்டித்துள்ளன. ஆனாலும்அவருடைய கைது மத்திய அரசுக்கு எந்தவிதமான தர்மசங்கடத்தையும் ஏற்படுத்தவில்லை.
வைகோ கைது செய்யப்பட்டது மாநில சட்ட-ஒழுங்குப் பிரச்சனை என்பதால் அதில் மத்திய அரசு தலையிடவில்லை.இதை மதிமுகவே சட்ட ரீதியாகச் சந்திக்கும். அதற்கான உதவிகளை பா.ஜ.க. செய்யத் தயாராக உள்ளது.
முன்னாள் சட்டத்துறை அமைச்சரான அருண் ஜேட்லி இது தொடர்பாக மதிமுக தலைவர்களுடன் ஆலோசனைநடத்தியுள்ளார்.
மேலும் வைகோ கைது செய்யப்பட்டதால் மதிமுக அமைச்சர்கள் பதவி விலக வேண்டும் என்று சிலர் வற்புறுத்திவருகின்றனர். அவர்கள் ஏன் பதவி விலக வேண்டும்? அவர்கள் என்ன தவறு செய்தார்கள் என்றார் வெங்கையாநாயுடு.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications