மேடை போட்டு விவாதிக்கத் தயார்: ராமதாஸ் ஆவேசம்
கோயம்புத்தூர்:
வன்னியர் சமூகத்தினருக்காகத் தான் தமிழகத்தை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்று தான் கூறியதாக வந்தசெய்திகளை மறுத்த பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், இதை மேடை போட்டு விளக்குவதற்கும் விவாதிப்பதற்கும்தயாராக இருக்கிறேன் என்றார்.
இதுகுறித்து இன்று கோயம்புத்தூரில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
தனியாக ஒரு மாநிலம் வேண்டும் என்று கோரிக்கை எழுப்புவதை தேச துரோகம் என்று கூறிவிட முடியாது.
சிறிய சிறிய மாநிலங்கள் தான் அந்தந்தப் பகுதிக்கேற்ற தனித்தன்மையுடன் விளங்க முடியும் என்பதை வரலாறேசொல்கிறது. என்னுடைய யோசனையை எதிர்க்கும் அரசியல் தலைவர்கள் அந்த வரலாற்றைச் சரியாகப்படிக்கவில்லை போலிருக்கிறது.
கர்நாடகத்திலிருந்து குடகும், மகாராஷ்டிராவிலிருந்து விதர்பாவும், ஆந்திராவிலிருந்து தெலுங்கானாவும், உத்தரப்பிரதேசத்திலிருந்து ஹரித் பிரதேசமும் தனி மாநிலங்களாக உருவாக வேண்டும் அந்த மாநிலங்களைச் சேர்ந்த சிலஅரசியல் கட்சிகள் முன்பு கோரிக்கை விடத் தான் செய்தன.
அந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களை தேச துரோகிகள் என்றா யாரும் கூறினார்கள்? இல்லையே. பிறகு ஏன் நான்இப்படிக் கூறும் போது மட்டும் என்னை தேச துரோகி என்பது போல் கூறுகிறார்கள்?
வன்னியர் ஒருவர் முதல்வராக வர வேண்டும் என்ற காரணத்திற்காகத் தான் நான் தமிழகத்தை இரண்டாகப் பிரிக்கவேண்டும் என்று கூறியதாகக் கூறுகிறார்கள்.
ஆனால் நான் அப்படிக் கூறவே இல்லை. கல்வியில் பின் தங்கியுள்ள மாவட்டங்களின் தரத்தை உயர்த்தவே நான்அவ்வாறு கூறினேன்.
இந்தப் பிரச்சனை குறித்து மேடை போட்டு, கூட்டம் கூட்டி விவாதிக்கவும் நான் தயாராகத்தான் இருக்கிறேன்என்றார் ராமதாஸ்.
இந்த விவகாரம் குறித்து மத்திய அரசிடம் தெரிவிப்பீர்களா என்று ஒரு நிருபர் கேட்டதற்கு, இப்போதைக்கு இதைப்பற்றி மத்திய அரசிடம் கூற மாட்டேன் என்று ராமதாஸ் பதிலளித்தார்.
உங்களை ஒரு அரசியல் தலைவர் என்று கூட சொல்லக் கூடாது என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளாரேஎன்று கேட்டதற்கு, அந்த அளவுக்குத் தரம் தாழ்ந்து நான் பேச மாட்டேன் என்றார் ராமதாஸ்.
மேலும் நிதி நெருக்கடி என்று தொடர்ந்து கூறி வரும் ஜெயலலிதா, தாசில்தார்களே துவக்கி வைக்க வேண்டியசாதாரண நலத் திட்ட நிகழ்ச்சிகளுக்கெல்லாம் கூட கோடிக்கணக்கில் தேவையில்லாமல் செலவழித்து வருகிறார்என்றும் ராமதாஸ் குற்றம் சாட்டினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications