திருவாவடுதுறை மாஜி துணை மடாதிபதியின் பாஸ்போர்ட், வங்கி கணக்குகள் முடக்கம்
குத்தாலம்:
திருவாவடுதுறை ஆதீனத்தைக் கொலை செய்ய முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட அதன் துணைமடாதிபதியாக இருந்தவரின் பாஸ்போர்ட் மற்றும் வங்கிக் கணக்குகள் ஆகியவை முடக்கி வைக்கப்பட்டுள்ளன.
திருவாவடுதுறை ஆதீனமான சிவப்பிரகாச தேசிக பராமாச்சார்ய சுவாமிகளின் படுக்கையருகே கடந்த 7ம் தேதிஇரவு விஷ ஊசிகளுடன் நான்கு பேர் நின்று கொண்டிருந்தனர்.
ஆதீனத்தைக் கொலை செய்வதற்காகத் தான் அவர்கள் அங்கு வந்துள்ளதாகத் தெரிய வந்தது. இது தொடர்பாகதுணை மடாதிபதியாக இருந்த காசி விஸ்வநாத சுவாமிகள் உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து இந்த மடத்தைப் பற்றிப் புதிய புதிய தகவல்கள் வெளியாகிக் கொண்டே இருக்கின்றன.
இவை குறித்து மாநில புலனாய்வுத் துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
விசாரணையின் போது மயிலாடுதுறையைச் சுற்றியுள்ள பல கூட்டுறவு வங்கிகளில் காசி விஸ்வநாத சுவாமிகள்ஏராளமாகப் பணம் போட்டு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் பல பெரிய வங்கிகளிலும் பிக்ஸட் டெபாசிட் திட்டத்திலும் ஏராளமாக அவர் பணம் போட்டுவைத்துள்ளார்.
இதையடுத்து காசி விஸ்வநாத சுவாமிகளின் வங்கிக் கணக்குகள் அனைத்தையும் அதிகாரிகள் முடக்கி வைத்தனர்.அவருடைய பாஸ்போர்ட்டும் முடக்கப்பட்டு விட்டது.
காசி விஸ்வநாத சுவாமிகள் குறித்து புலனாய்வுத் துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள காசி விஸ்வநாத சுவாமிகள் சமீபத்தில் தான் துணை மடாதிபதிபதவியிலிருந்து ஆதீனத்தால் நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி












Click it and Unblock the Notifications