மதிமுக அமைச்சர்களை நீக்க அதிமுக கோரிக்கை: நாடாளுமன்றத்தில் இன்றும் கூச்சல்
டெல்லி:
விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் பேசி வரும் மதிமுக மத்திய அமைச்சர்கள் இருவரையும் நீக்க வேண்டும் எனநாடாளுமன்றத்தில் அதிமுக இன்று கோரிக்கை விடுத்தது. இதையடுத்து இரு அவைகளிலும் இன்றும் பெரும்அமளி ஏற்பட்டது.
இரண்டாவது நாளாக இன்றும் பி.எச். பாண்டியன் பேசிய பேச்சுக்கள் அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டன.
நேற்றும் வைகோ விவகாரத்தால் இரு அவைகளிலும் பிரச்சனை ஏற்பட்டது.
மத்திய பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் வேலூர் சிறைக்குச் சென்று வைகோவைச் சந்தித்தை காங்கிரஸ்மற்றும் அதிமுக எம்.பிக்கள் பிரச்சனையாக்கினர்.
அப்போது பாண்டியன் தெரிவித்த கருத்துக்களை பா.ஜ.க., மதிமுக உறுப்பினர்கள் கண்டித்தனர். இதையடுத்துஅவரது பேச்சை அவைக் குறிப்பில் இருந்து சபாநாயகர் நீக்கினார்.
இன்றும் மதிமுக விவகாரத்தை அதிமுக கிளப்பியது.
புலிகளுக்கு ஆதரவாகப் பேசி வருவதன் மூலம் மதிமுக அமைச்சர்களான கண்ணப்பனும் செஞ்சி ராமச்சந்திரனும்பதவிப் பிரமாணத்தின்போது எடுத்துக் கொள்ள தேசப் பாதுகாப்பு உறுதிமொழியை மீறிவிட்டதாக அதிமுகஎம்.பிக்கள் குற்றம் சாட்டினர்.
லோக் சபாவில் பி.எச்.பாண்டியனும் ராஜ்யசபாவில் பி.ஜி.நாராயணனும் இன்று இப் பிரச்சனையைக் கிளப்பினர்.
இன்று காலை கேள்வி நேரம் முடிந்தவுடன் பி.எச். பாண்டியன் பேசுகையில், இரு மதிமுக அமைச்சர்களும் பொடாசட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஆதரித்து பேசியுள்ளனர். குறிப்பாககண்ணப்பன் புலிகளை ஆதரித்துக் கருத்து தெரிவித்துள்ளார். இதன் மூலம் பொடா சட்ட விதிகளை அவர்மீறிவிட்டார். எனவே, கண்ணப்பன் உள்பட இரு மதிமுக அமைச்சர்களையும் பதவி நீக்கம் செயய வேண்டும்என்றார்.
இதற்கு நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரமோத் மகாஜன், மதிமுக எம்.பிக்கள், பா.ம.க. எம்.பிக்கள்,தெலுங்கு தேசம் உறுப்பினர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
மதிமுக எம்.பி. கிருஷ்ணன் கூறுகையில், தமிழகத்தில் பொடா சட்டத்தை ஜெயலலிதா அரசு தவறாக பயன்படுத்திஇருக்கிறது என்றார்.
இதற்கு அதிமுகவினரும் எதிர் குரல் கொடுக்கவே அவையில் குழப்பம் ஏற்பட்டது.
அப்போது தலையிட்ட சபாநாயகர் மனோகர் ஜோஷி, அமைச்சர்கள் மீது இது போன்ற பொத்தாம் பொதுவானகுற்றச்சாட்டுகளைக் கூற அவை விதிகளில் இடமில்லை. அமைச்சர் கண்ணப்பன் குறித்து பாண்டியன் பேசியதுஅனைத்தும் அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்படுகிறது என்று அறிவித்தார்.
இதற்கு எதிராக அதிமுகவினர் குரல் கொடுத்தனர். ஆனால், சபாநாயகர் அவர்களை அமரச் சொல்லிஆணையிட்டதால் பேசாமல் அமர்ந்தனர்.
அப்போது இடைமறித்த முன்னாள் பிரதமர் சந்திரசேகர், காங்கிரஸ் எம்.பி. தாஸ்முன்ஷி ஆகியோர், அமைச்சர்கள்பேசியதாகக் கூறப்படுவதைத் தான் பாண்டியன் இங்கு தெரிவித்தார். இதில் தவறு ஏதும் இருப்பதாக நாங்கள்கருதவில்லை என்றனர்.
ராஜ்யசபாவிலும்....
இதே பிரச்சனையை ராஜ்யசபாவில் அதிமுக எம்.பி. நாராயணன் கிளப்பினார். கேள்வி நேரம் முடிந்தவுடன் எழுந்தநாராயணன் கையில் ஒரு செய்தித் தாளை ஆட்டிக் காட்டியபடி பேசினார்.
இந்தச் செய்தித் தாளில் புலிகளுக்கு ஆதரவாக கண்ணப்பன் பேசிய பேச்சு விவரம் முழுமையாகவெளியாகியுள்ளது. இதனால், அவரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும். இது குறித்து இப்போதுவிவாதிக்க அனுமதிக்க வேண்டும் என்றார்.
இதற்கு பா.ஜ.க. தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
அவையின் துணைத் தலைவர் நஜ்மா ஹெப்துல்லா, இது குறித்து விவாதிக்க அதிமுகவினருக்கு அனுமதி தரமுடியாது என்று அறிவித்து அவர்களை அமரச் செய்தார்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல்












Click it and Unblock the Notifications