காஷ்மீர்: தீவிரவாதிகள் தாக்கி ராணுவ கேப்டன் பலி
ரஜவுரி:
காஷ்மீரின் ரஜவுரி பகுதியில் உள்ள ஒரு உயரதிகாரிகள் குடியிருப்புக்குள் நேற்று இரவு திடீரென்று புகுந்ததீவிரவாதிகள் நடத்திய அதிரடித் தாக்குதலில் ஒரு ராணுவ கேப்டன் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இதைத் தொடர்ந்து ராணுவத்தினரும் பதிலடித் தாக்குதலில் ஈடுபட்டதில் நான்கு தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
ரஜவுரி பகுதியில் உள்ள இந்தக் குடியிருப்பில் தான் ஏராளமான ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். மற்றும் ராணுவ உயர்அதிகாரிகள் தங்கள் குடும்பத்தினருடன் தங்கியுள்ளனர்.
நேற்று இரவு சுமார் 7.15 மணிக்கு இந்தக் குடியிருப்பில் திடீரென்று ஏழு தீவிரவாதிகள் புகுந்தனர். நுழைந்தவேகத்திலேயே கிரனைட் குண்டுகளை நாலாபுறமும் சுற்றி எறிந்த அவர்கள் பின்னர் சராமாரியாகத் துப்பாக்கியால்சுட ஆரம்பித்தனர்.
இதனால் அங்கிருந்த அதிகாரிகளும் அவர்களுடைய குடும்பத்தினரும் சிதறி ஓடி கிடைத்த மறைவிடத்தில்பதுங்கிக் கொண்டனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ராணுவத்தினரும் போலீசாரும் இந்தக் குடியிருப்பைச் சுற்றிவளைத்து தீவிரவாதிகளை நோக்கிப் பதிலடித் தாக்குதல் நடத்தினர்.
நேற்று இரவு சுமார் 7.45 மணிக்குத் தொடங்கிய இந்தத் துப்பாக்கிச் சண்டை இரவு 11 மணி வரை தொடர்ந்தது.இதைத் தொடர்ந்து அப்பகுதியில் உள்ள ஒரு மசூதிக்குள் சென்று தீவிரவாதிகள் ஒளிந்து கொண்டனர்.
இதனால் துப்பாக்கிச் சத்தம் ஓய்ந்து இன்று காலை வரை அப்பகுதியில் மயான அமைதி நிலவியது. பின்னர் காலை5.25 மணிக்கு இரு தரப்பினருக்கும் இடையே மீண்டும் கடுமையான துப்பாக்கிச் சண்டை நடந்தது.
அங்கு தொடர்ந்து ராணுவத்தினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது. இதுவரை ஒரு ராணுவ கேப்டனும் நான்கு தீவிரவாதிகளும் இந்தச் சண்டையின் போது கொல்லப்பட்டனர்.
இந்தக் குடியிருப்பில் உள்ள பல ராணுவ உயர் அதிகாரிகளைச் சுட்டுக் கொன்று விரைவில் நடைபெறவுள்ளகாஷ்மீர் தேர்தலைச் சீர்குலைக்கும் திட்டத்துடன் தான் தீவிரவாதிகள் இங்கு புகுந்ததாக ஒரு அதிகாரி தெரிவித்தார்.
இதற்காக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்புதான் எல்லைப் பகுதி வழியாக பாகிஸ்தானிலிருந்து இந்தத்தீவிரவாதிகள் ஊடுருவியதாகவும் தெரிய வந்துள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications