""எதைப் பேச வேண்டும் என்று எனக்குத் தெரியும்"": அதிமுகவுக்கு கண்ணப்பன் பதில்
கோயம்புத்தூர்:
அரசியல் சட்டத்திற்குப் புறம்பாக நான் எதுவும் பேசி விடவில்லை என்று மதிமுக அமைச்சரான கண்ணப்பன் இன்று கூறினார்.
விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகப் பேசிய மதிமுகவைச் சேர்ந்த இரு மத்திய அமைச்சர்களையும் நீக்க வேண்டும் என்று நேற்று நாடாளுமன்றத்தில் அதிமுகவினர் கூச்சல் போட்டு அமளி ஏற்படுத்தினர்.
இந்நிலையில் இது குறித்து இன்று கோயம்புத்தூரில் நிருபர்களிடம் கண்ணப்பன் கூறியதாவது:
இத்தனை ஆண்டு கால என்னுடைய அரசியல் கால அனுபவத்தில் அரசியல் சட்டம் எல்லாம் எனக்கும் தெரியும். எதைப் பேச வேண்டும், எதைப் பேசக் கூடாது என்றும் எனக்கு நன்றாகவே தெரியும்.
அமைச்சராக நான் பதவியேற்கும் போது ஏற்றுக் கொண்ட உறுதிமொழிகளின் படி தான் எப்போதுமே நான் நடந்து வந்துள்ளேன். இதனால் என்னைப் பதவியை விட்டு நீக்க வேண்டும் என்ற பேச்சுக்கே இடமில்லை.
தமிழகத்தில் பொடா சட்டம் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. அரசியல் பழிவாங்கும் நோக்கிலேயே மதிமுக பொதுச் செயலாளரான வைகோவும் எட்டு மதிமுக பிரமுகர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இனப்பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்களுக்குப் பாதுகாப்பளித்து வரும் புலிகளுக்கு நாங்கள் தொடர்ந்து ஆதரவளிப்போம். புலிகளை ஆதரிப்பதாலேயே அவர்களுடைய நடவடிக்கைகளை இந்திய மண்ணில் நாங்கள் ஆதரிக்கிறோம் என்று கூறிவிட முடியாது.
இந்தியாவில் எந்தப் பகுதியில் தீவிரவாதமும் வன்முறையும் தலை தூக்கினாலும் மதிமுக அதைக் கடுமையாக எதிர்க்கும் என்றார் கண்ணப்பன்.
-->
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications