தமிழகத்தில் மழையோ மழை: ஒருவர் பலி
கும்பகோணம்:
தமிழகத்தில் நேற்றும் இன்றும் பல இடங்களிலும் நல்ல மழை பெய்ததைத் தொடர்ந்து பொதுமக்களும் காவிரி டெல்டா விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கும்பகோணத்தில் நேற்று பிற்பகல் தொடங்கிய மழை மாலை வரை நீடித்தது. சுமார் 4 மணி நேரத்திற்கு நிற்காமல் மழை கொட்டியது.
இதனால் காவிரி நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் நீர் மட்டம் மளமளவென்று உயர ஆரம்பித்தது. மேட்டூர் அணையிலும் இன்று காலை 42.65 அடியாக நீர் உயர்ந்திருந்தது.
இதற்கிடையே பலத்த மழையால் அறுந்து கிடந்த மின் கம்பியில் ஒருவர் தெரியாமல் தன் காலை வைத்ததில் மின்சாரம் தாக்கி உடல் கருகி உயிரிழந்தார்.
பெரம்பலூர் பகுதியிலும் நல்ல மழை பெய்ததால் அங்குள்ள விவசாயிகள் மிகவும் மகிழ்ந்து போயுள்ளனர்.
கோவையில்...
இந்நிலையில் நேற்று கோயம்புத்தூரிலும் நன்றாக மழை பெய்தது. அங்கு சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது.
பெரும் வெள்ளம் காரணமாக திறந்து கிடந்த பாதாளச் சாக்கடைக்குள் ஒரு சிறுமி தவறாக விழுந்து பலியான சம்பவம் இன்றைய தட்ஸ்தமிழ்.காமில் விளக்கமாகக் கூறப்பட்டுள்ளது.
ஊட்டியில்...
இதற்கிடையே நீலகிரி மாவட்டத்திலும் நேற்று நல்ல மழை பெய்தது.
ஊட்டி மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் உள்ள பெரும்பாலான இடங்களிலும் மழை கொட்டு கொட்டென்று கொட்டியுள்ளது.
இதனால் ஊட்டியில் நேற்று வழக்கத்திற்கு அதிகமாக குளிர் நிலவியது.
மதுரையில்...
மதுரையிலும் நேற்று சரியான மழை பெய்துள்ளது.
இதனால் வழக்கம் போல பெரியார் பஸ் நிலையத்திலும் ரயில் நிலையத்திற்கு முன்பாக உள்ள சாலையிலும் முழங்காலுக்கும் மேலாக நீர் தேங்கி நின்றது.
இன்று காலை வரை இப்பகுதிகளில் நீர் தேங்கி நின்றது.
இதே போல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் நேற்றும் இன்றும் நல்ல மழை பெய்துள்ளதாகத் தெரிகிறது.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications