வேலூர் சிறையில் வாந்தி, பேதி: மாஜி அமைச்சர், கைதிகள் மயக்கம்
வேலூர்:
வேலூர் மத்திய சிறையில் வாந்தி, பேதி காரணமாக முன்னாள் அமைச்சர் பொன்னுச்சாமி உள்ளிட்ட 20 கைதிகள்மயக்கமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
வேலூர் மத்திய சிறையில் நேற்று அதிகாலை சில கைதிகளுக்குத் திடீரென்று வாந்தி, பேதி ஏற்பட்டது.
நேரம் செல்லச் செல்ல வாந்தி, பேதியால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே சென்றது.
இதையடுத்து சிறையிலேயே இருக்கும் மருத்துவமனை மூலம் அந்தக் கைதிகளுக்கு முதலுதவி அளிக்கப்பட்டது.ஆனாலும் அவர்களுக்கு வாந்தி, பேதி நிற்கவில்லை.
இதையடுத்து ஊழல் வழக்கில் தண்டனை பெற்று வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர்பொன்னுச்சாமி உள்ளிட்ட கொலை-கொள்ளை கைதிகள் 20 பேர் மயக்கமடைய ஆரம்பித்தனர்.
இதையடுத்து இந்த 20 கைதிகளும் வேலூர் அரசு மருத்தவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.இதையடுத்து அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
வேலூர் சிறையில் கைதிகளுக்கு சப்ளை செய்யப்படும் குடிநீரில் கழிவு நீர் கலந்ததால் தான் அதைக்குடித்தவர்களுக்கு வாந்தி, பேதி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு குடிநீர் சுத்தம் செய்யப்பட்டது.
இதே வேலூர் மத்திய சிறையில் தான் பொடா சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள மதிமுக பொதுச் செயலாளர்வைகோவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அவர் நலமுடன் இருப்பதாக சிறை அதிகாரிகள்தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications