கண்ணப்பனை பதவி நீக்கக் கோரி வாஜ்பாய்க்கு ஜெயலலிதா கடிதம்
சென்னை:
விடுதலைப்புலிகளைத் தொடர்ந்து ஆதரித்துப் பேசி வரும் மதிமுகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் கண்ணப்பனைஅப்பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று கோரி பிரதமர் வாஜ்பாய்க்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம்எழுதியுள்ளார்.
கடந்த புதன்கிழமை நாடாளுமன்றக் கூட்டத்தின் போது கண்ணப்பனை நீக்க வேண்டும் என்று அதிமுகஎம்.பிக்களான பி.எச். பாண்டியன் மற்றும் பி.ஜி. நாராயணன் ஆகியோர் கடும் அமளியில் ஈடுபட்டனர். அமைச்சர்பதவியை ஏற்கும் போது தான் எடுத்துக் கொண்ட அரசியல் சட்ட உறுதிமொழிகளை கண்ணப்பன் மீறி விட்டார்என்று அதிமுக எம்.பிக்கள் கூறினர்.
இதற்குப் பதிலளிக்கும் வகையில் நேற்று கோயம்புத்தூரில் பேசிய கண்ணப்பன், பல்லாண்டு கால அரசியல்அனுபவத்தின் அடிப்படையில் எதைப் பேச வேண்டும், எதைப் பேசக் கூடாது என்று எனக்கு நன்றாகவே தெரியும்.அரசியல் சட்ட விதிமுறைகளை மீறி நான் எதுவும் பேசவில்லை. எப்போதும் பேச மாட்டேன் என்று சற்றுசூடாகவே கூறினார்.
இந்நிலையில் கண்ணப்பனை நீக்க வேண்டும் என்று கோரி வாஜ்பாய்க்கு இன்று ஜெயலலிதா கடிதம்எழுதியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:
கடந்த சில காலமாகவே கண்ணப்பன் புலிகளைத் தொடர்ந்து ஆதரித்துப் பேசி வருகிறார். பல சமயங்களில் அவர்புலிகளை மிகப் பகிரங்கமாகவே ஆதரித்துப் பேசியுள்ளார்.
கண்ணப்பனின் இந்தப் பேச்சுக்கள் அனைத்தும் தற்செயலானவை அல்ல. பொடா சட்டத்தின்படி இது பெரும்குற்றமாகும்.
மத்திய அமைச்சரவையில் உள்ள ஒரு அமைச்சரே இந்தச் சட்டத்தை மீறி நடக்கலாமா?
அவரைத் தொடர்ந்து மத்திய அமைச்சரவையில் வைத்திருந்தால் நாடு பெரும் அபாயத்தைச் சந்திக்க நேரிடும்அபாயம் ஏற்பட்டு விடும்.
எனவே மத்திய அமைச்சரவையிலிருந்து கண்ணப்பனை உடனடியாக நீக்க வேண்டும் என்று அக்கடிதத்தில்ஜெயலலிதா கூறியுள்ளார்.
கடந்த 28ம் தேதி வரை கண்ணப்பன் பல இடங்களிலும் புலிகளை ஆதரித்துப் பேசியவற்றைப் பட்டியல் போட்டுஇந்தக் கடிதத்தில் காட்டியுள்ளார் ஜெயலலிதா.
இந்தக் கடிதத்தின் நகலை துணைப் பிரதமர் அத்வானிக்கும் ஜெயலலிதா அனுப்பி வைத்துள்ளார்.
கடந்த மாதம் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கைது செய்யப்படுவதற்கு முன்பும் வாஜ்பாய் மற்றும்அத்வானிக்கு ஜெயலலிதா கடிதம் எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications