""தமிழர்களை ஒன்றுபடுத்த சிறை செல்வதில் எனக்கு மகிழ்ச்சியே"": நெடுமாறன்
சென்னை:
உலகில் உள்ள தமிழர்களை ஒன்றுபடுத்தும் முயற்சியில் ஈடுபட்டதற்காக எனக்குத் தண்டனை அளிக்கப்பட்டிருந்தால் இந்தச் சிறைவாசத்தை நான் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்கிறேன் என்று தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் கூறினார்.
விடுதலைப்புலிகளை ஆதரித்துப் பேசியதற்காக பொடா சட்டத்தின் கீழ் நேற்று இரவு கைது செய்யப்பட்டு நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் நெடுமாறன் நிருபர்களிடம் கூறியதாவது:
உலகத் தமிழர்களை ஒன்றுபடுத்தும் முயற்சியில் ஈடுபட்டதற்காக பொடா சட்டத்தின் கீழ் கைது என்றால் அதை நான் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்கிறேன்.
புலிகளைத் தொடர்ந்து ஆதரிப்பேன். ஈழத் தமிழர் பிரச்சனைக்கு புலிகளால் தான் தீர்வு காண முடியும். ஒவ்வொரு தமிழனும் செய்யும் கடமையைத் தான் நானும் செய்துள்ளேன்.
பொடா சட்டத்தில் என்னைக் கைது செய்திருப்பதாக மட்டும் போலீசார் தெரிவித்தனர். ஆனால் எந்த வழக்கு பதிவு செய்துள்ளனர் என்று எனக்குத் தெரியாது என்றார் நெடுமாறன்.
நெடுமாறன் அறிக்கை:
இதற்கிடையே நெடுமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
பொடா சட்டம் வரும் போதே தமிழ் தேசிய உணர்வாளர்களுக்கு எதிராக அது பயன்படுத்தப்படும் என்று எதிர்பார்த்தோம்.
அதன்படியே இப்போது நானும் கைது செய்யப்பட்டுள்ளேன்.
இயக்கத் தோழர்களும் தமிழ் உணர்வாளர்களும் தங்கள் கடமைகளைத் தொடர்ந்து செய்து வர வேண்டிக் கொள்கிறேன். யாரும் எதற்கும் எப்போதும் அஞ்ச வேண்டாம்.
அடக்குமுறைகள் ஒரு போதும் வென்றதாகச் சரித்திரமே இல்லை. உரிமை காக்கும் வீரர்கள் தோற்றதாகவும் வரலாறு சொல்லவில்லை என்று அவ்வறிக்கையில் நெடுமாறன் கூறியுள்ளார்.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
Mukesh Ambani: கோடி கோடியாய் லாபம் வந்தாலும்.. ஒரு ரூபா எடுக்கல.. அம்பானி நிலைமையை பாத்தீங்களா! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications