தலால் ஆஸ்மி நிபந்தனை ஜாமீனில் தளர்வு
சென்னை:
குவைத்திலிருந்து காதலர் காதர் பாஷாவுடன் சென்னைக்குத் தப்பி வந்த அந்நாட்டு கோடீஸ்வரப் பெண் தலால் ஆஸ்மிக்கு ஜாமீன் நிபந்தனை தளர்த்தப்பட்டுள்ளது.
சென்னை ஆலந்தூர் கோர்ட்டில், பாஸ்போர்ட் இல்லாமல் இந்தியா வந்த குற்றத்திற்காக தலால் ஆஸ்மி மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் தலால் ஆஸ்மி தற்போது ஜாமீனில் வெளியே உள்ளார். ஒவ்வொரு மாதமும் ஆலந்தூர் கோர்ட்டில் வந்து ஆஜராக வேண்டும் என்று அவருக்கு நிபந்தனை விதிக்கப்பட்டது.
இதையடுத்து ஜாமீனில் விடுதலையான பிறகு காதர் பாஷாவுடன் ஆந்திர மாநிலம் கடப்பா சென்று விட்ட தலால் ஆஸ்மி, அங்கு வைத்து காதர் பாஷாவைத் திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் தலால் ஆஸ்மி மூன்று மாத கர்ப்பமாக உள்ளார். இதனால் கடப்பாவிலிருந்து ஒவ்வொரு முறையும் சென்னை வருவது சிரமமாக இருப்பதாகவும், ஜாமீன் நிபந்தனையை தளர்த்துமாறும் அவர் ஆலந்தூர் கோர்ட்டில் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த கோரிக்கையை நீதிபதி ஜெகநாதன் விசாரித்தார். பின்னர் 3 மாதத்திற்கு ஒரு முறை ஆஜராகினால் போதும் என்று நிபந்தனையை தளர்த்தி நீதிபதி உத்தரவிட்டார்.
இதற்கிடையே நேற்று கோர்ட்டிற்கு வந்திருந்த தலால் ஆஸ்மிக்கு திடீரென்று மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் அவசர அவசரமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications