சொல்லிட்டு பள்ளம் தோண்டுங்கப்பா .. குமரியார்
சென்னை:
சாலைகள் மற்றும் தெருக்களில பள்ளம் தோண்டினால் முன்பே கூறி விட்டு தோண்ட வேண்டும் என்று மாநகராட்சிமற்றும் பல்வேறு நிறுவனங்களுக்கு மூத்த காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.
அரசியலில் பள்ளம் தோண்டுவதில் எல்லா அரசியல்வாதிகளும் பிசியாக இருக்கும் நேரத்தில் மக்களின் அன்றாடபிரச்சனையில் அக்கறை காட்டியுள்ள குமரியாருக்கு ஒரு நன்றி.
தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் பள்ளங்களும், அதை நிரப்ப மண்ணைப் போட்டு ஏற்படுத்தப்பட்ட மேடுகளுமாககாணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அதிகம் அவஸ்தைக்குள்ளாகி வருகிறார்கள். பெரிய சாலைகளும்இந்த பள்ளங்களுக்கு தப்பவில்லை.
மாநகராட்சி சார்பிலும், தனியார் தொலைபேசி துறையினர் சார்பிலும், அரசுத் துறையான பி.எஸ்.என். சார்பிலும்மாறி மாறி குழி தோண்டி வருகிறார்கள். இதனால் பொதுமக்கள் படும் அவதி சொல்லி மாளாது.
இப்படி திடீர் திடீரென்று பள்ளம் தோண்டுவதை தடுக்குமாறு மாநகராட்சி, அரசுத் துறை நிறுவனங்களுக்கு குமரிஅனந்தன் அறிக்கை மூலம் கோரிக்கை வைத்துள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில்,
சென்னை நகரில் தொலைபேசி துறையினர், மாநகராட்சியினர், அரசுத் துறையினர் திடீர் திடீரென்று பள்ளங்கள்தோண்டி வருகின்றனர். இதனால் போக்குவரத்து அதிகம் பாதிக்கப்படுகிறது. மக்களும் அவதியுறுகிறார்கள்.
இது மாதிரியான சூழ்நிலைகளில் எந்தப் பகுதியில் எப்போது பள்ளம் தோண்டப்படுகிறது என்பதை முன்கூட்டியேபொதுமக்களுக்கு அறிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளார் அவர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications