பா.ஜ.க. தேசியக் கவுன்சில் கூட்டம் தொடங்கியது
டெல்லி:
பாரதீய ஜனதா கட்சியின் தேசியக் கவுன்சில் கூட்டம் இன்று டெல்லியில் தொடங்கியது.
பிரதமர் வாஜ்பாய், துணைப் பிரதமர் அத்வானி, கட்சியின் தலைவர் வெங்கையா நாயுடு, கட்சியின் தேசியக் குழு நிர்வாகிகள், மாநிலத்தலைவர்கள், எம்.பிக்கள், அனைத்து மாநில பா.ஜ.க. எம்.எல்.ஏக்கள் என கட்சியின் முக்கியத் தலைவர்கள் அனைவருமே இக் கூட்டத்தில்கலந்து கொண்டுள்ளனர்.
விரைவில் நடக்கவுள்ள குஜராத், ஜம்மூ- காஷ்மீர் தேர்தல் மற்றும் 8 மாநில சட்டப் பேரவைகளுக்கு நடக்கவுள்ள தேர்தல் வியூகம் குறித்துஇக் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.
டெல்லி தால்கோத்ரா அரங்கத்தில் நடக்கும் இந்த நிகழ்ச்சியையொட்டி அங்கு மிக பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
வந்தே மாதரம் முழக்கத்துடன் தொடங்கிய இந்தக் கூட்டத்தில் வெங்கைய்யா நாயுடு கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டதற்கு ஒப்புதல்பெறப்பட்டது. அவரது பெயரை துணைப் பிரதமர் அத்வானி முன்மொழிய பிரதமர் வாஜ்பாய் வழிமொழிந்தார். பலத்த கைதட்டலுக்குஇடையே நாயுடு தலைவரானதற்கு இந்தக் கவுன்சில் ஒப்புதல் தந்தது.
கட்சியின் நிர்வாகக் குழு மாற்றி அமைக்கப்பட்ட பின்னர் நடக்கும் முதல் தேசியக் கவுன்சில் கூட்டம் இது.
இக் கூட்டத்தின் துவக்க நிகழ்ச்சியில கலந்து கொள்ள திமுக, பா.ம.க., மதிமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளுக்கும் பா.ஜ.க. அழைப்புவிடுத்தது. இதையடுத்து திமுக எம்.பி. விடுதலை விரும்பி இதில் பங்கேற்றார்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
இறுதிச் சடங்குகளை மேற்கொண்ட அஜித் குமாரின் சகோதரர்.. மோகினி மணி உடல் பெசன்ட் நகர் மயானத்தில் தகனம்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்!












Click it and Unblock the Notifications