சோனியா விழாவுக்கு மைதானம் ஒதுக்க ஜெயலலிதா மறுப்பு
சென்னை:
காங்கிரஸ்-த.மா.கா. இணைப்பு விழா நடத்த மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தை ஒதுக்க கோரிக்கை விடுத்தும் தமிழக அரசு இன்னும்அதற்கு அனுமதி தரவில்லை.
வரும் 14ம் தேதி இந்த இணைப்பு விழா நடக்கிறது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கலந்து கொள்ளும் இந்த விழாவுக்கு மிகப்பாதுகாப்பான இடம் ரேஸ்கோர்ஸ் மைதானம் தான் என காங்கிரஸ், த.மா.கா. தலைவர்கள் முடிவு செய்தனர்.
நீண்ட ஆலோசனைகளுக்குப் பின் மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் இந்த விழாவை நடத்த முடிவு செய்துள்ளனர்.
இதையடுத்து கடந்த 3 வாரங்களுக்கு முன்பே இந்த மைதானத்துக்கான கட்டுப்பாட்டு அதிகாரி டேவிதாரிடம் மைதானத்தை ஒதுக்கக் கோரித.மா.கா. தலைவர் வாசன் மனு கொடுத்தார்.
இதை உடனடியாக ஏற்ற டேவிதார் மைதானத்தை ஒதுக்கலாம் என பரிந்துரைத்து அந்த விண்ணப்பம் அடங்கிய பைலைவிளையாட்டுத்துறை அமைச்சர் தம்பிதுரைக்கு அனுப்பினார். அந்த பைலில் தம்பிதுரையும் கையெழுத்திட்டு முதல்வருக்குஅனுப்பிவிட்டதாகத் தெரிகிறது.
ஆனால், இதுவரை இந்த விஷயத்தில் முதல்வர் ஜெயலலிதா எந்த முடிவும் எடுக்கவில்லை. மைதானத்தை ஒதுக்க இன்னும் அவர் அனுமதிதரவில்லை.
கடந்த இரு வாரங்களாக இந்த பைல் ஜெயலலிதா வசம் உள்ளது.
வி.வி.ஐ.பி. பட்டியலில் உள்ள சோனியா காந்தி இசட் பிளஸ் பிரிவு பாதுகாப்பில் இருப்பவர். அவர் கலந்து கொள்ளும் விழாக்களில் ஒருவாரத்துக்கு முன்பே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுவிடும்.
டெல்லியில் இருந்து ஒரு வாரத்துக்கு முன்பே அதிகாரிகள் வந்து விழா நடக்கும் இடத்தைப் பார்வையிட்டு இப்படித்தான் மேடை அமைக்கவேண்டும் என்று பரிந்துரைப்பார்கள். அதன் பின்னர் தான் மேடை அமைக்கும் பணியே தொடங்கும்.
ஆனால், 14ம் தேதி நடக்கவுள்ள விழாவுக்கு ஜெயலலிதா இன்னும் அனுமதி தராததால் த.மா.காவினர் கையை பிசைந்து கொண்டுள்ளனர்.
இது குறித்து ஜெயலலிதாவைச் சந்தித்துப் பேச த.மா.கா. எம்.எல்.ஏக்கள் சிலர் முயன்றனர். ஆனால், அவர்களைச் சந்திக்கவும் ஜெயலலிதாநேரம் ஒதுக்கவில்லை.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications