30 ஆண்டுகளுக்குப் பின் ஓடிய "நீராவி எஞ்சின்" ரயில்: மக்கள் பரவசம்
சென்னை:
இந்திய ரயில்வேயின் 150வது ஆண்டு விழாக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இன்று சென்னையிலிருந்து திருவள்ளூருக்கு அந்தக் கால நீராவி எஞ்சின் ரயில் விடப்பட்டது.
கன்னியாகுமரியில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் நீராவி எஞ்சின் ரயில்கள் தான் ஓடிக் கொண்டிருந்தன.
அதை நினைவுபடுத்திக் கொள்ளும் வகையில் சென்னையில் உள்ள தென்னக ரயில்வே அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த நீராவி எஞ்சினை இன்று ஓடச் செய்ய முடிவு செய்யப்பட்டிருந்தது.
அதன்படி இன்று காலை சென்னையிலிருந்து திருவள்ளூருக்கு (சுமார் 50 கி.மீ. தூரம்) இந்தச் சிறப்பு நீராவி ரயில் கிளம்பிச் சென்றது. மத்திய ரயில்வேதுறை இணை அமைச்சரான ஏ.கே. மூர்த்தி தேசியக் கொடியை அசைத்து இந்த ரயில் ஓட்டத்தைத் துவக்கி வைத்தார்.
இந்த நீராவி எஞ்சினுடன் பொருத்தப்பட்டிருந்த ஏழு பெட்டிகளில் பல பள்ளி-கல்லூரி மாணவ-மாணவிகளும், சில ஆசிரியர்களும், ரயில்வே அதிகாரிகளும், பத்திரிக்கை நிருபர்களும், சில வி.ஐ.பிக்களும் பயணம் செய்தனர்.
ஆனாலும் வழி நெடுகிலும் உள்ள ரயில் நிலையங்களில் ஏராளமான குழந்தைகளும் இளைஞர்களும் இந்த ரயிலுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அவர்கள் இப்போது தான் இது போன்ற நீராவி ரயில் எஞ்சின் கரும்புகையை வெளியேற்றிக் கொண்டே தண்டவாளத்தில் ஓடியதை முதன் முதலாகப் பார்க்கின்றனர்.
இந்த நீராவி எஞ்சின் போட்ட வித்தியாசமான ஹாரன் ஒலி கூட பல மக்களையும் நின்று திரும்பிப் பார்க்க வைத்து ஆச்சரியப்படுத்தியது.
40 அல்லது 50 வயதைத் தாண்டியவர்கள் கூட அதிகமான அளவில் ரயில் நிலையங்களுக்கு வந்து அந்தக் கால நீராவி எஞ்சினைப் பார்த்து தங்களுடைய பழைய நினைவுகளை அசைபோட்டுக் கொண்டிருந்ததையும் பார்க்க முடிந்தது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
திருவள்ளூர் மக்களுக்கு தெற்கு ரயில்வே குட்நியூஸ்.. புதிதாக 6 எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்று செல்லும் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications