"என் கணவரைக் கொன்று விட்டு போலீசார் நாடகம்": கவுஸ் பாட்சா மனைவி கதறல்
சென்னை:
என்னுடைய கணவரைப் போலீசாரே சுட்டுக் கொன்று விட்டு, அவர் தப்பியோடி விட்டதாகப் போலீசார் நாடகமாடிவருகின்றனர் என்று கொள்ளை வழக்குகளில் கைதான கவுஸ் பாட்சாவின் மனைவி கீதா புகார் கூறியுள்ளார்.
போலீசாரிடம் இருந்து தப்பிச் சென்று சென்னையில் தொடர் கொள்ளைகளில் ஈடுபட்டு வரும் கவுஸ் பாட்சாஉடனடியாகச் சரணடைய வேண்டும் என்று சென்னை மாநகரப் போலீஸ் கமிஷனர் விஜய்குமார் நேற்றுஎச்சரிக்கை விடுத்திருந்தார்.
அவன் உடனடியாக சரணடையாவிட்டால் கண்டவுடன் சுட்டுக் கொல்ல வேண்டிய நிலை உருவாகும் என்றும்அவர் எச்சரித்தார்.
இந்நிலையில் தன் கணவரைப் போலீசார் சுட்டுக் கொன்று விட்டு அதை மறைப்பதற்காக இவ்வாறு எச்சரிக்கைவிடுக்கும் நாடகத்தைப் போலீசார் நடத்திக் கொண்டிருக்கின்றனர் என்று கீதா கூறியுள்ளார். இது குறித்துநிருபர்களிடம் கீதா கூறுகையில்,
என்னுடைய கணவர் தப்பிச் சென்று விட்டார் என்று போலீசார் கூறுவதை என்னால் நம்பவே முடியவில்லை.அவரை நான் தான் போலீசாரிடமே ஒப்படைத்தேன்.
அவர் உண்மையிலேயே தப்பிச் சென்றிருந்தால் எப்படியாவது என்னை வந்து பார்த்திருப்பார். குறைந்ததுபோனிலாவது தொடர்பு கொண்டு என்னுடன் பேசியிருப்பார். ஆனால் இதுவரை அவர் என்னை வந்து பார்க்கவோஅல்லது போனில் பேசவோ இல்லை.
இதனால் என் கணவர் உண்மையிலேயே போலீசாரிடமிருந்து தப்பிச் சென்று விட்டாரா என்று எனக்குச் சந்தேகம்ஏற்பட்டுள்ளது.
அவரைச் சுட்டுக் கொன்று விட்டு அதிலிருந்து தப்பிப்பதற்காகத் தான் போலீசார் இப்படிப் பொய் சொல்லிநாடகமாடிக் கொண்டிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.
இதையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ஹேபியஸ் கார்ப்பஸ் (ஆள் கொணர்வு) மனு ஒன்றை நான் தாக்கல்செய்துள்ளேன்.
என் கணவர் தப்பிச் சென்று விட்டதாகப் போலீசார் கூறிய நாளிலிருந்து அவர்கள் என்னையும் என்னுடையபக்கத்து வீட்டுக்காரர்களையும் தொடர்ந்து வந்து விசாரணை என்கிற பெயரில் பயமுறுத்திக் கொண்டிருக்கின்றனர்என்று கீதா கூறினார்.
கவுஸ் பாட்சா - கீதா தம்பதிக்கு இரண்டு மகன்களும் இரண்டு மகள்களும் உள்ளனர். பாட்சாவின் இரண்டாவதுமனைவியான கீதா வேலூரில் தன் குழந்தைகளுடன் தங்கியுள்ளார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இறுதிச் சடங்குகளை மேற்கொண்ட அஜித் குமாரின் சகோதரர்.. மோகினி மணி உடல் பெசன்ட் நகர் மயானத்தில் தகனம்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications