"இடம்" தெரியாமல் முழிக்கும் காங்கிரஸ்-தமாகா
மதுரை:
காங்கிரஸ்-தமாகா இணைப்பு விழா நடப்பதற்கு ஒரு வாரமே உள்ள நிலையில் இன்னும் விழா நடைபெறும் இடம் குறித்து முடிவு செய்யப்படவில்லை.
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இந்த இணைப்பு விழாவில் கலந்து கொள்வதைத் தொடர்ந்து விழா நடக்கும் தமுக்கம் மைதானத்தை டெல்லியிலிருந்த வந்திருந்த சிறப்புப் பாதுகாப்புப் படையினர் பார்வையிட்டனர்.
தமுக்கம் தவிர மதுரை மருத்துவக் கல்லூரியின் மைதானத்தையும் பாதுகாப்புப் படையினர் பார்வையிட்டுள்ளனர்.
இந்த மைதானம் பிரம்மாண்டமாக இருப்பதால் இங்கேயே விழாவை வைத்துக் கொள்ளலாமா என்று யோசிக்குமாறு பாதுகாப்புப் படையினர் கூறியுள்ளதாகத் தெரிகிறது.
இதையடுத்து தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவனும் அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் ரமேஷ் சென்னிதாலாவும் மதுரை விரைந்து இரண்டு மைதானங்களையும் பார்வையிட்டனர்.
இதன் பின்னர் நிருபர்களிடம் ரமேஷ் சென்னிதாலா பேசுகையில்,
காங்கிரஸ் கட்சியில் தமாகா இணைவது குறித்து காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் பெரும் ஆர்வம் எழுந்துள்ளது. முழு ஆதரவுடன் அவர்கள் உற்சாகம் கரைபுரண்டு ஓட செயல்பட்டு வருகிறார்கள்.
திட்டமிட்டபடி 14ம் தேதி இணைப்பு விழா நடைபெறும். அதன் பிறகு தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி மிகப் பெரிய பலத்துடன் திகழும்.
இணைப்பு விழா நடைபெறும் இடம் குறித்து இன்று மாலை சென்னையில் முடிவு அறிவிக்கப்படும்.
நாங்கள் சென்னை சென்று தமாகா தலைவர்களுடன் கலந்து பேசி இன்று மாலையிலேயே இணைப்பு விழா நடைபெறும் இடம் குறித்து இறுதியான முடிவை அறிவிப்போம் என்றார் ரமேஷ் சென்னிதாலா.
காங்கிரஸ்-தமாகா இணைப்பு விழா வரும் 14ம் தேதி நடைபெறவுள்ளது. விழாவுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் இன்னும் விழா நடக்கும் இடம் முடிவு செய்யப்படவில்லை.
இதனால் பந்தலும் போடாமல் மேடையும் போடாமல் மதுரையில் மிகவும் மந்தமான சூழ்நிலை தான் காணப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications