நெடுமாறனை சென்னை சிறைக்கு மாற்றக் கோரி டி.ஜி.பிக்கு நோட்டீஸ்
சென்னை:
பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் இதயநோயாளி என்பதால் அவரை கடலூர் சிறையிலிருந்து சென்னை சிறைக்கு மாற்ற வேண்டும் என்று தமிழக டி.ஜி.பி.நெய்ல்வால் மற்றும் சிறைத்துறை ஐ.ஜி. ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
நெடுமாறனின் வழக்கறிஞர் சந்திரசேகரன் அனுப்பியுள்ள இந்த நோட்டீசில் கூறப்பட்டுள்ளதாவது:
கடந்த 1ம் தேதி கைது செய்யப்பட்டு பொடா தனி நீதிமன்ற நீதிபதி முன் நெடுமாறன் ஆஜர்படுத்தப்பட்டார்.
தனக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதால் அடிக்கடி மருத்துவ வசதி பெற வேண்டியுள்ளதால்சென்னை மத்திய சிறையில் தன்னை வைக்க வேண்டும் என்று அப்போது நெடுமாறன் நீதிபதியிடம் கோரிக்கைவிடுத்தார்.
நீதிபதி எல். ராஜேந்திரனும் அதற்குச் சம்மதித்து நெடுமாறனை சென்னை மத்தியச் சிறையில் வைக்கும்படிஉத்தரவிட்டார்.
நீதிபதியின் வீட்டிலிருந்து சென்னை மத்திய சிறைக்குக் கொண்டுவரப்பட்ட நெடுமாறன், அங்கு காவலில்வைக்கப்படாமல் திடீரென்று கடலூர் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டு அடைக்கப்பட்டார்.
நீதிபதி உத்தரவு பிறப்பிக்கும் போது விசாரணை அதிகாரியும் உடன் இருந்தார். அப்படி இருந்தும் சென்னைசிறையில் நெடுமாறனை அடைக்காமல் கடலூர் சிறைக்கு போலீசார் கொண்டு போய் விட்டனர். அவர்கள்நீதிபதியின் உத்தரவை மதித்து நடக்கவில்லை.
போலீசார் வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் செயல்பட்டுள்ளனர். இது மனித உரிமையை மீறும் செயலாகும்.
கடலூர் சிறையில் இருக்கும் போது நெடுமாறனின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அதற்கு டி.ஜி.பியும்சிறைத்துறை ஐ.ஜியும் தான் பொறுப்பேற்க வேண்டும்.
அவரை உடனடியாக சென்னை சிறைக்கு மாற்றவில்லை என்றால் சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும்என்று அந்த நோட்டீசில் கூறப்பட்டுள்ளது.
-
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில்












Click it and Unblock the Notifications