கொடுத்தார்கள்.. பறித்தார்கள்...
ஈரோடு:
ஈரோட்டில் ஏழை மக்களுக்கு இலவச வேஷ்டி, சேலை வழங்குவதாகக் கூறி அமைச்சரால் தரப்பட்ட உடைகளை ரேஷன் கடைஊழியர்கள் பறித்துக் கொண்டனர்.
நெசவாளர்களுக்கு வாழ்வு தருவதாகக் கூறி தமிழக அரசு நேற்று முதல் ரேஷன் கடைகளில் வேஷ்டி, சேலைகளை விற்கஆரம்பித்துள்ளது. இதற்காக பட்டினியால் கிடக்கும் நெசவாளர்களிடம் இருந்து கோடிக்காண விலை கொடுத்து வேஷ்டி,சேலைகளை வாங்கி அவர்களுக்கு வாழ்வு தந்துள்ளதாக அரசு கூறுகிறது.
இந்தத் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா சென்னையில் ஆரம்பித்து வைக்க அவரது அமைச்சர்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும்இதை துவக்கி வைத்தனர்.
ஈரோட்டில் அமைச்சர் ராமசாமி தலைமையில் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது. ஈரோடு டீச்சர்ஸ் காலனி ரேசன் கடையில் நடந்தஇந்த விழாவில், அமைச்சர் போட்டோ பிடித்துக் கொள்வதற்காக அந்தப் பகுதியைச் சேர்ந்த 9 ஏழைப் பெண்களுக்கு இலவச,வேஷ்டி தருவதாகக் கூறி அதிமுகவினர் அழைத்து வந்தனர்.
பூ வியாபாரம் செய்யும் பெண், கூலி வேலை செய்யும் பெண்கள் என சமூகத்தின் அடிமட்டத்தைச் சேர்ந்த அந்தப் பெண்களுக்குதங்களுக்கு இலவசமாக சேலை கிடைக்கப் போவதை நினைத்து ஓடி வந்தனர்.
அமைச்சரும் சேலைகளைத் தந்தார். போட்டோ எல்லாம் பிடித்தாகிவிட்டது. அடுத்தாக அமைச்சர் அம்மா புகழை திருப்புகழ்மாதிரி மேடையில் பேச ஆரம்பித்தார்.
இதையடுத்து அந்த இலவச சேலை பெற்ற பெண்கள் மேடையை விட்டு இறங்கி அதிமுகவினரை புகழ்ந்து கொண்ட நடந்து செல்லபின்னால் ஓடியது ரேசன் கடையைச் சேர்ந்த கும்பல். அவர்களிடம் தரப்பட்ட சேலைகளை இந்தக் கும்பல் பறித்தது.
இது சும்மா போட்டோவுக்காக கொடுத்தது.. குடுங்கம்மா என்று அவர்கள் மிரட்ட அந்த கூலி வேலை செய்யும் பெண்கள் பயந்துபோய் அதைத் தந்துவிட்டு சென்றுவிட்டனர்.
ஆனால், அதில் ஒரு பெண் மட்டும் சேலைகளைத் தர மறுத்தார். நான் என் அன்றாட பிழைப்புக்காக கூலி வேலைக்குப் போய்கொண்டிருந்தபோது வழியில் வந்து தடுத்து கூப்பிட்டு வந்துவிட்டு இப்படி மோசம் செய்கிறீர்களே.. நீங்கல்ெலாம்.. என்றுஆரம்பித்து கெட்ட வார்த்தைகளில் அர்ச்சனை செய்தார்.
மேடைக்கு பின்புறம் ஏதோ சண்டை நடப்பதை நமது நிருபரும் பிற பத்திரிக்கை நிருபர்களும் ஓடிப் போய் பார்த்தபோது தான்விஷயம் புரிந்தது. நிருபர்கள் போய் விசாரிக்க ஆரம்பித்தவுடன் அந்த ரேசன் கடை கும்பல் ஓடிவிட்டது.
அமைச்சரின் பார்வைக்கு இதை நிருபர்கள் எடுத்துச் செல்ல, அதிமுக கரை வேட்டிகளை அனுப்பி ரேசன் கடை கும்பலிடம்இருந்து சேலைகளைப் பறித்து மீண்டும் அந்த ஏழைப் பெண்களுக்குத் தரச் செய்தார் அமைச்சர்.
இது சேலத்தில்...
ஈரோட்டில் கொடுத்ததைப் பறித்தார்கள். ஆனால், வேலூரில் நடந்த இதே போன்ற விழாவில் ஏழைகளை நம்ப வைத்து கழுத்தைஅறுத்தது அதிமுக கும்பல்.
இதே போன்ற இலவச வேஷ்டி, சேலை விழா வேலூரிலும் நடந்தது. பகாயம் என்ற இடத்தில் நடந்த விழாவுக்கு அமைச்சர்வில்வநாதன் தான் தலைமை.
அமைச்சர் கையால இலவச வேஷ்டி, சேலை வேணுமா என்று கேட்டு குடிசைப் பகுதிகளில் இருந்து பெண்களை அழைத்துவந்தனர் அதிமுகவினர். இலவசம் என்றால் வாயைப் பிளக்கும் நம் மக்கள் (ஏழ்மை அவர்களை அப்படி நிலைக்குத்தள்ளிவிடுவது தான் உண்மை) அதிமுகவினரை நம்பிச் சென்றனர்.
சுமார 35 பெண்களுக்கு இலவச வேஷ்டி, சேலைகளைத் தந்துவிட்டு சிவப்பு விளக்கு சுழலும் தனது காரில் அமைச்சர் பந்தாவாகஏறி உட்கார, அதிகாரிகள் அந்தப் பெண்களிடம் 70 ரூபாய்க்கு ரசீது தந்து காசு கொடுங்கட என்றனர்.
கடுப்பாகிப் போன அந்தப் பெண்கள் இலவசம்னு சொல்லி கூட்டி வந்து ஏமாத்துரூங்களே... என்று கேட்டபடி அந்தசேலைகளையும் வேஷ்டிகளையும் தூக்கி அதிகாரிகள் முகத்தில் வீசினர்.
துணிந்த சில பெண்கள் அதை அமைச்சரின் காரின் மீதும் வீசி எறிந்தனர். இதையடுத்து அமைச்சரின கார் அங்கிருந்து அசுரவேகத்தில் கிளம்பிச் சென்றது.
அதிகாரிகள் கூறுகையில், சும்மா பந்தாவுக்காக இப்படி மேடையில் வைத்து துணிகளைக் கொடுத்துவிட்டுப் போய்விடுவார்கள்.அப்புறம் இதுக்கு யார் பணம் தருவது? இதை யார் கணக்கில் எழுதுவது? கணக்கு வழக்கு இடித்தால் சரியில்லாவிட்டால் ஆட்சிமாறியதும் எங்கள் தலையை உருட்டுவார்கள் என்றனர்.
பட்டினி, பசியில் உழலும் நம் ஊரின் கீழ் மட்ட மக்களுக்கு எங்கெங்கெல்லாம் எதிரிகள்?
-
இறுதிச் சடங்குகளை மேற்கொண்ட அஜித் குமாரின் சகோதரர்.. மோகினி மணி உடல் பெசன்ட் நகர் மயானத்தில் தகனம்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications