தமிழில் வாஜ்பாய் கவிதைகள்: நாளை வெளியீடு
சென்னை:
பிரதமர் வாஜ்பாய் எழுதிய கவிதைகளின் தமிழ்ப் பதிப்பு நாளை டெல்லியில் நடக்கும் ஒரு நிகழ்ச்சியின் போது வெளியிடப்படுகிறது.
வாஜ்பாய் நல்ல கவிஞரும் கூட. அவரது கவிதைகள் அனைத்தும் ஆங்கிலம், தமிழ் ஆகியவற்றில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் தமிழில் "வாஜ்பாய் கவிதைகள்" என்ற பெயரில் அவருடைய கவிதைகள் மொழி பெயர்க்கப்பட்டு வெளியிடப்படவுள்ளன. மத்திய திட்டக் குழு உறுப்பினர் டாக்டர் வெங்கட சுப்பிரமணியம் இவற்றை மொழி பெயர்த்துள்ளார்.
டெல்லியில் வரும் 8ம் தேதி வாஜ்பாய் கவிதைகளின் தமிழ்ப் பதிப்பு வெளியிடப்படவுள்ளது. வாஜ்பாய் நூலை வெளியிடுகிறார்.
வாஜ்பாயிடமிருந்து முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டு நூல் குறித்து மதிப்பீடு செய்து உரையாற்றுகிறார் கவிப் பேரரசு வைரமுத்து.
இந்தப் புத்தகத்தை தமிழகத்தின் முன்னாள் முதல்வரான பேரறிஞர் அண்ணாவுக்கு காணிக்கையாக்கி உள்ளார் வாஜ்பாய் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
