2 சாலை விபத்துக்களில் 7 பேர் சாவு
ராமநாதபுரம்:
தமிழகத்தில் இன்று நேரிட்ட 2 வெவ்வேறு சாலை விபத்துக்களில் 4 அரசு ஊழியர்கள் உள்பட 7 பேர் உடல்நசுங்கி உயிரிழந்தனர்.
பெரம்பலூர் அருகே...
கந்தர்வகோட்டை பஞ்சாயத்து யூனியன் கமிஷனர் சின்னப்பா உள்பட 10 அரசு அதிகாரிகள் ஒரு டாடா சுமோகாரில் சுற்றுலா சென்று கொண்டிருந்தனர்.
இன்று அதிகாலை பெரம்பலூர் அருகே சென்று கொண்டிருக்கும் போது எதிரே நின்று கொண்டிருந்த ஒரு லாரி மீதுசுமோ கார் பயங்கரமாக மோதியது.
இவ்விபத்தில் சின்னப்பா உள்பட நான்கு அரசு அதிகாரிகள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
காயமடைந்த மற்ற ஆறு பேரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ராமநாதபுரம் அருகே...
இதற்கிடையே ஆடி அமாவாசையை முன்னிட்டு மதுரையிலிருந்து ஏராளமான பக்தர்களை ஏற்றிக் கொண்டு இன்று
காலை ஒரு பஸ் ராமேஸ்வரத்திற்குக் கிளம்பியது. எதிர்த் திசையில் ராமேஸ்வரத்திலிருந்து மற்றொரு அரசு பஸ்வந்து கொண்டிருந்தது.
ராமநாதபுரம் மாவட்டம் பட்டினம்காத்தான் அருகே இந்த இரண்டு பஸ்களும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.
இவ்விபத்தில் ஒரு தம்பதி உள்பட மூன்று பேர் அந்த இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
விபத்தில் காயமடைந்த 15 பேர் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். படுகாயமடைந்த ஒருபஸ்சின் டிரைவர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications