சென்னை போலீஸ் கமிஷனரை புகழ்ந்து தள்ளிய உயர் நீதிமன்ற நீதிபதி
சென்னை:
தமிழக உள்துறைச் செயலாளர் நரேஷ் குப்தாவையும், சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமாரையும்சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கற்பக விநாயகம் புகழ்ந்து தள்ளியுள்ளார்.
ஜாய் இமாக்குலேட் என்பவர் போலீஸ் நிலையத்தில் வைத்து போலீஸாரால் கொடுமைப்படுத்தப்பட்டதாக அவர்தொடர்ந்த வழக்கில் போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நிவாரணம்வழங்கவும் உயர் நீதிதமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்நிலையில் கோர்ட் உத்தரவின்படி நிவாரணத் தொகையும் வழங்கப்படவில்லை, நடவடிக்கையும்எடுக்கப்படவில்லை என்பதால் கோர்ட் உத்தரவை மீறியதாக விஜயகுமார் மற்றும் நரேஷ் குப்தா ஆகியோர் மீதுகோர்ட் அவமதிப்பு வழக்கை ஜாய் இமாக்குலேட் தொடர்ந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி கற்பக விநாயகம் கோர்ட் அவமதிப்பு மனுவைத் தள்ளுபடி செய்தார். மேலும்இது தொடர்பாக அவர் கூறுகையில்,
அரசுத் தரப்பில் ஏற்பட்ட தாமதத்திற்காக இரண்டு நல்ல அதிகாரிகள் மீது கோர்ட் அவமதிப்பு வழக்கு போடும்அளவுக்கு சென்றது துரதிர்ஷ்டவசமானது.
மனுதாரருக்கு உரிய நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது, ஆனால் தாமதமாகத் தரப்பட்டுள்ளது. இந்தத்தாமதத்திற்கான காரணத்தை விஜயகுமாரும், நரேஷ் குப்தாவும் தெளிவாக தெரிவித்துள்ளனர்.
விஜயகுமார் மிகச் சிறந்த, நேர்மையான அதிகாரி. மாநில போலீஸாருக்கே தலைமை வகிக்கும் அளவுக்குத் தகுதிபெற்றவர். ஏன், தேசிய அளவிலும் கூட தலைமை வகிக்கும் சிறப்பு உடையவர் அவர்.
நரேஷ் குப்தாவும் நேர்மையான அதிகாரி தான். இரு அதிகாரிகள் மீதும் கோர்ட் அவமதிப்பு வழக்குதொடரப்பட்டது தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும் என்று தனது உத்தரவில் கூறியிருந்தார் நீதிபதி கற்பக விநாயகம்.












Click it and Unblock the Notifications