பா.ம.க., திமுகவின் பெட்ரோல் பங்க் ஊழல்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

பெட்ரோல் பங்க்குகள் ஒதுக்கிய ஊழலில் பா.ம.க., திமுக ஆகிய கட்சியினருக்கும் பெரும் பங்கு இருப்பது தெரியவந்துள்ளது.

காவிரியில் கஅதிலும் இப்போது வெளியாகியுள்ள பா.ஜ.க. அரசின் பெட்ரோல் பங்க் ஒதுக்கீடு ஊழலில் பெரும்பாலானவை பா.ம.கவைச்சேர்ந்த பொன்னுசாமி அமைச்சராக இருந்தபோது நடந்தவை என்றும் கூறப்படுகிரது.

பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த பொன்னுசாமி மத்திய பெட்ரோலியத்துறை இணையமைச்சராக இருந்தபோது ராமதாஸ்மற்றும் அவரது மகன் அன்புமணி ஆகியோர் பரிந்துரைத்த நூற்றுக்கணக்கானவர்களுக்கு பெட்ரோல் பங்க் மற்றும் கேஸ்ஏஜென்சிகளை ஒதுக்கித் தந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.

இதற்காக அன்புமணி பலரிடம் லட்சக்கணக்கில் பணம் வாங்கியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அதே போல திமுகவினருக்கும் ஏராளமான பெட்ரோல் பங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மத்திய திமுக அமைச்சர்கள், எம்.பிக்கள்பரிந்துரைகளின்பேரில் இவை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

இதில் அதிகம் புகுந்து விளையாடியுள்ளது பா.ம.க. தான். இப்போது ரயில்வே துறை இணையமைச்சராகியுள்ள ஏ.கே.மூர்த்தியின்(இவர் முன்பு சென்னை மாம்பலம் ரயில்வே ஸ்டேசன் வாசலில் காய்றி கடை வைத்திருந்தவர்) மனைவி பத்மினிக்கு பெட்ரோல்பங்க் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதுவும் சென்னையின் மத்தியப் பகுதியான தி.நகரில் இந்த பெட்ரோல் பங்க் ஒக்கித் தரப்பட்டுள்ளது.

அதே போல பா.ம.க. தலைவரும் எம்.எல்.ஏவுமான ஜி.கே. மணியின் மகன் தமிழ்க்குமரனுக்கும் ஒரு பெட்ரோல் பங்க் ஒதுக்கித்தரப்பட்டுள்ளது. இது ஓமலூரில் அமைந்துள்ளது.

அதே மாதிரி பா.ம.க. எம்.எல்.ஏ. ரவிராஜ் உள்பட நூற்றுக்கணக்கான பா.ம.கவினருக்கு பெட்ரோல் பங்க், கேஸ் ஏஜென்சிகளைஒதுக்கி தமிழகத்தின் சார்பில் அமைச்சரான தனது கடமையை திறம்பட நிறைவேற்றியுள்ளார் பொன்னுசாமி.

சேலம், கோவை, ஈரோடு, நாமக்கல் பகுதியில் ஏராளமான பெட்ரோல் பங்குகளும் கேஸ் ஏஜென்சிகளையும் பா.ம.கவினர்ஸ்வாகா செய்துள்ளனர்.

இதில் திமுகவும் சளைக்கவில்லை. அக் கட்சியின் திருச்சி முன்னாள் எம்.எல்.ஏவான மறைந்த அன்பில் பொய்யாமொழிகுடும்பத்துக்கு ஒரு பெட்ரோல் பங்க்கை ஒதுக்கித் தந்துள்ளார் ஸ்டாலின். இவரது நெருக்குதலால் திமுக அமைச்சர்கள்,எம்.பிக்கள் பல பெட்ரோல் பங்க்குகளை திமுகவினருக்கு வாங்கித் தந்துள்ளனர்.

அதே போல நாகப்பட்டிணம் திமுக எம்.பியான விஜயனின் மனைவி ஜோதி மணிக்கு ஒரு பெட்ரோல் பங்க். மேலும் சென்னை,திருச்சியில் பல கேஸ் ஏஜென்சிகள் திமுகவினர் வசம் போயுள்ளன. இவ்வாறு திமுகவும் தமிழக மக்களுக்காக கடுமையாகஉழைத்துள்ளது.

ஆனால், ரயில்வே இணையமைச்சரான மூர்த்தி தனது மனைவிக்கு பெட்ரோல் பங்க் ஒதுக்கப்படவில்லை என்று மறுக்கிறார்.பெட்ரோல் பங்க் ஒதுக்கலை.. வெறும் கேஸ் ஏஜென்சி தான் ஒதுக்கினார்கள் (அட!) என்று கூறியுள்ளார்.

உப்பைத் திண்ணவன்.. தண்ணி குடிக்கனும்

இந் நிலையில் வார இதழ் ஒன்றுக்கு முன்னாள் பெட்ரோலியத்துறை அமைச்சர் வாழப்பாடி ராமமூர்த்தி கொடுத்துள்ள பேட்டியில்,

முறைகேடாகத் தரப்பட்ட எல்லா பெட்ரோல் பங்க் உரிமங்களையும் ரத்து செய்த பிரதமர் வாஜ்பாய்க்கு ஒரு சல்யூட். நான் மத்தியபெட்ரோலிய அமைச்சராக இருந்தபோது போரில் இறந்த வீரர்களின் குடும்பத்துக்கு பாதுகாப்புத்துறையின் பரிந்துரையைப்பெற்றுத் தான் பங்குகளை ஒதுக்கித் தந்தேன்.

ஆனால், பா.ம.கவின் பொன்னுசாமி இணை அமைச்சரான பிறகு தமிழகத்தையே அவரது கட்சியின் தலைவர் ராமதாஸ்குத்தகைக்கு எடுத்துக் கொண்டார். இதை நான் பெட்ரோலியத்துறை கேபினட் அமைச்சர் ராம் நாயக்கிடம் சொன்னேன்.

ஆனால், அவரோ கூட்டணிக் கட்சிக்காரங்க ஆயிட்டாங்க.. அவரை என்னால கண்ட்ரோல் பண்ண முடியலை என்றார்.

வாஜ்பாயால் ராம் நாயக்கை கண்ட்ரோல் பண்ண முடியலை.. ராம் நாயக்கால் பொன்னுசாமியைக் கண்ட்ரோல் பண்ண முடியலை..பொன்னுசாமியால் ராமதாஸைக் கண்ட்ரோல் பண்ண முடியலை. இது தான் இந்த ஊழலுக்குக் காரணம்.

இந்த ராமதாஸ் பா.ம.கவில் அடிபட்டவன், உதைபட்டவன், செத்தவன், உழைத்தவன் இப்படி அடிமட்ட தொண்டர்களுக்காகபங்க்குகளை வாங்கிக் கொடுத்தால் கூட ஒத்துக் கொள்ளலாம்.

ஆனால், 5 லட்சம், 10 லட்சம்னு காசு வாங்கிட்டு இந்த உரிமங்களை பலருக்கும் வித்திருக்கார்.

இந்த வியாபாரத்தைத் தான் இவரது மகன் அன்புமணி டெல்லியில் உட்கார்ந்து கொண்டு செய்து கொண்டிருக்கிறார்.பொன்னுசாமி வெறும் பொம்மை தான்.

மகாராஷ்டிரத்துல அந்துலே அமைச்சராக இருந்தபோது ஊழல் செய்ததாக ராம்நாயக் மூலமாகத் தான் பா.ஜ.க. காரங்க கேஸ்பைல் பண்ணினாங்க. இப்ப ராம்நாயக்கே மாட்டிக்கிட்டார். உப்புத் திண்ணவன்.. தண்ணிய குடிச்சுத் தானே ஆகனும் என்றுகூறியுள்ளார் வாழப்பாடி ராமமூர்த்தி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+